சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்புடன் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது இந்த சீரியல் தொடங்கிய நாளிலிருந்து தற்போது வரையிலும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த சீரியலை திருச்செல்வம் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சீரியலில் படித்த பெண்களை திருமணம் செய்துக் கொண்டு வீட்டின் அடிமைகளாக நடத்தி வரும் ஆண்களையும், ஆண்கள் அதிகாரத்தில் இருந்து விடுபட்டு சுதந்திரமாக வாழ வேண்டும் எதிர்த்து கேள்வி கேட்க வேண்டும் என்பதனை உணர்த்தும் வகையில் இந்த படத்தின் கதை அமைந்திருக்கிறது.
எனவே இந்த சீரியலை பார்த்து விட்டு தனது மனைவி தன்னை ஆதி குணசேகரன் ஆகவும் அவளை ஜனனியாகவும் நினைத்துக் கொண்டு சண்டை போடுவதாக ஆண்கள் கூறி வருகிறார்களாம். எனவே இந்த சீரியலை விரைவில் நிறுத்த வேண்டும் என கூறிவரும் நிலையில் ஆனால் அதே நேரத்தில் பெண்களின் ஆதரவுடன் டிஆர்பி யில் முன்னணியும் வகித்து வருகிறது.
இவ்வாறு இந்த சீரியல் மக்கள் மத்தியில் இந்த அளவிற்கு ஆதரவை பெற்றதற்கு முக்கிய காரணம் ஆதி குணசேகரன் மற்றும் ஜனனி கேரக்டர் தான். ஆதி குணசேகரன் வில்லனாக அனைத்து பெண்களையும் அடைக்கி வரும் நிலையில் ஜனனி ஆதி குணசேகரனை எதிர்த்து கேள்வி கேட்டு போராடி வருகிறார் எனவே இந்த இரண்டு கேரக்டர்களுக்கும் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.
ஆதி குணசேகரன் ஆரம்பத்தில் சாருபாலா மீது காதல் ஏற்பட அவரை திருமணம் செய்துக் கொள்ள ஆசைப்பட்டார். ஆனால் அவர் படிக்காதவன் என்பதனால் சாருபாலா திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டார் எனவே தான் குணசேகரன் படித்த பெண்களை திருமணம் செய்துக் கொண்டு தனது வீட்டில் அடிமைகளாக நடத்தி வருகிறார்.
இவ்வாறு ஒரு எபிசோடில் சாருபாலா மற்றும் ஆதி குணசேகரன் இருவரும் சந்தித்து பேசி இருப்பார்கள் அதிலிருந்து எடிட் செய்து ஆதி குணசேகரன் ரொமான்ஸ் செய்வது போல் ரசிகர்கள் வீடியோ ஒன்றை உருவாக்கி இருக்கும் நிலையில் அதை சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இவ்வாறு இதனை பார்த்த ரசிகர்கள் ஆதி குணசேகரனின் வில்லத்தனத்தை மட்டும் தான் பார்த்திருப்பீர்கள் ரொமான்ஸ்சை பார்த்ததில்யே என கேலியாக கூறி வருகிறார்கள்.
When she text you after so many years for no reason pic.twitter.com/JDQB9Mtty9
— 𝙑𝑺 (@VS__offll) June 25, 2023