நீலி கண்ணீர் வடித்து பெரிய ட்ராமா போடும் குணசேகரன்.. கரிகாலன் கையை உடைத்து கதறவிட்ட சக்தி.!

0

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் அனைவரும் எதிர்பாராதபடி வீட்டில் இருக்கும் மருமகள் மிகவும் துணிச்சலாகவே குணசேகரனுக்கு எதிராக பேசி வருகின்றார்கள். அதிலும் முக்கியமாக ரேணுகா அடிக்காத ஒரு குறையாக குணசேகரனை தனது வார்த்தையினால் தாக்கி வருகிறார். இவ்வாறு இவருடைய பேச்சை சிறப்பாக இருப்பதனால் இவரை ஹைலைட்டாக இந்த சீரியலில் காமித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆதிரை கரிகாலன் திருமணம் நின்று விடுமோ என்ற ஏதோ ஒரு பயத்தில் குணசேகரன் வீட்டில் இருக்கும் மருமகள்களிடம் சத்யம் கேட்கிறார் அதற்கு ரேணுகா கிடைத்த சான்சை வைத்து குணசேகரனை நிக்க வைத்து அனைவரும் முன்பும் கேள்வி கேட்க பெருத்த அவமானம் ஏற்படுகிறது.

இதனால் பதில் கூற முடியாமல் குணசேகரன் அமைதியாகி விடுகிறான் இவ்வாறு அனைத்து மருமகள்களும் ஒவ்வொன்றாக குணசேகரனை எதிர்த்து கேள்வி கேட்டு வரும் நிலையில் இதற்கு மேல் சரவெடி தான். இந்நிலையில் குணசேகரன் திடீரென்று நீலி கண்ணீர் வடிக்கிறார் அதாவது ஞானத்தை தன் பக்கம் இழுத்து வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக பெரிய நாடகம் ஒன்றை நடத்துகிறார்.

ஆனால் ஞானம் எதுவும் பேசாமல் இருந்து வரும் நிலையில் மறுபடியும் குணசேகரன் இடம் ஞானம் எப்பொழுதும் போல பழக ஆரம்பித்தால் இவரை விட முட்டாள் வேறு யாரும் இல்லை. இதனை அடுத்து குணசேகரன் எப்படியாவது தான் நினைத்தபடி ஆதிரை கரிகாலன் திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும் என்பதற்காக பல தில்லாலங்கடி வேலைகளை செய்து வருகிறார்.

மறுபுறம் கரிகாலன் அவருடைய நண்பர் போனில் இருக்கும் புகைப்படங்களை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது அந்த புகைப்படத்தில் அருணையும் பார்த்துவிட அனைவரும் முன்னாடியும் ஆர்ப்பாட்டம் பண்ண ஆரம்பிக்கிறார் பிறகு அனைவரும் சேர்ந்து அவரை தேடும் பணியில் இறங்க பிறகு கரெக்டாக அவர்கள் டீ குடித்த இடத்திற்கு சென்று போய் விசாரிக்கின்றனர்.

இதன் மூலம் அவர்கள் பக்கத்தில் தான் தங்கி இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்கின்றனர் ஆனால் கடையில் கரிகாலன் கையை உடைத்து கதறிக்கொண்டு வருகிறார். அதற்கு கரிகாலன் இவ்வாறு என்னுடைய கை உடைவதற்கு சக்தி தான் காரணம் என கூற அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.