எதிர்நீச்சல் சீரியலில் நடிச்சிக்கிட்டே 12th-ல இவ்வளவு மார்க்கா.! சீரியல் பிரபலம் ரித்திக் பேட்டி..

தமிழ் சின்னத்திரையில் வெற்றிகரமான ஒரு தொலைக்காட்சியாக சன் டிவி விளங்கி வரும் நிலையில் இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களும் மிகவும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் டிஆர்பிளும் தொடர்ந்து முன்னணி வகிக்கும் பல சீரியல்களை அறிமுகப்படுத்தி வருகிறது அந்த வகையில் தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் புகுந்த வரவேற்பினை பெற்று வரும் சன் டிவி சீரியல் தான் எதிர்நீச்சல்.

இந்த சீரியல் முழுக்க முழுக்க பெண்களின் அடிமைத்தனத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது. அதாவது நல்லா படித்த பெண்கள் அடிமைப்படுத்தும் கணவர்களை திருமணம் செய்து கொள்கின்றனர் எனவே படித்தும் இவர்களால் எந்த வேலைக்கும் போக முடியாமல் வீட்டில் வேலை செய்து வருகின்றனர் ஒரு கட்டத்தில் இவர்கள் தங்களுடைய கணவர்களை எதிர்த்து போராடும் வகையில் இந்த சீரியலின் கதைகளும் அமைந்துள்ளது.

அந்த வகையில் இந்த சீரியலில் நடிகர் மாரிமுத்து, கனிகா, பிரியதர்ஷினி, ஹரிப்பிரியா, மதுமிதா, சத்திய பிரியா ஆகியோர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். மேலும் இந்த சீரியலில் தர்ஷன் எனும் கதாபாத்திரத்தில் நடித்த பிரபலமானவர்தான் நடிகர் ரித்திக் ராமேந்திரா. இவர் இந்த சீரியலில் கனிகா மற்றும் மாரிமுத்துவின் மகனாக நடித்த வருகிறார்.

சமீபத்தில் ரித்திக் ராவேந்திரா பிரபல யூட்யூப் சேனல் ஒன்று இருக்கு பேட்டியளித்த நிலையில் அதில் ஏராளமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அப்பொழுது 12வது என்ன குரூப் நீங்க? என்று தொகுப்பாளர் கேள்வி எழுப்பிய நிலையில் அதற்கு நான் கம்ப்யூட்டர் சயின்ஸ் குரூப். 12 வகுப்பை நான் எதிர்நீச்சல் சீரியல்தான் நடிச்சுக்கிட்டே படிச்சேன் சூட்டிங் இன்னைக்கு நடக்கும் நாளைக்கு பரீட்சை இருக்கும் நான் நடிக்கறதுக்கு நடுவில் இருக்கும் இடைவேளை நேரத்தில் நான் படிச்சேன் இரவு முழுவதும் தூங்காமல் படிச்சிட்டு பரீட்சை முடிந்ததும் சூட்டிங் வந்துடுவேன் என ரித்திக் பதிலளித்தார்.

பிறகு என்ன மார்க் நீங்க சொல்ல முடியுமா? என்ற கேள்விக்கு 512/600 என அவர் பதில் கூறினார். மேலும் இயக்குனர் எனக்காக செட்யூல் டைம் எல்லாம் மாத்தி வச்சாங்க எனவும் கூறினார்கள். இவ்வாறு நடித்துக் கொண்டே படித்து இவ்வளவு மார்க் எடுத்துள்ள நிலையில் இவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment