டிஆர்பி-இல் நானா நீயா பயங்கர போட்டியில் விஜய் டிவி சன் டிவி.! வெல்லப் போவது எந்த தொலைக்காட்சி

0

தற்பொழுது உள்ள அனைத்து தொலைக்காட்சிகளும் போட்டிபோட்டுக்கொண்டு டிஆர்பி-யில் எந்த சேனல் முன்னணி வகிக்கிறது என்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். அந்த வகையில் தற்பொழுது டிஆர்பி-யில் போட்டி போட்டுக்கொண்டு முன்னணி வகிக்கும் சேனல்கள் சன் டிவி மற்றும் விஜய் டிவி இந்த இரண்டு தொலைக்காட்சிகளும் தான் போட்டி போட்டுக்கொண்டு பல ரியாலிட்டி ஷோக்கள் மற்றும் சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள்.

அதுவும் முக்கியமாக ரியாலிட்டி ஷோக்களை இரண்டு தொலைக்காட்சிகளும் காப்பியடித்து கொஞ்ச மாற்றத்துடன் அறிமுகப்படுத்தி வந்தாலும் சீரியல்களை வித்தியாசமாக ஒளிப்பரப்பி வருகிறார்கள். அதுவும் சன் டிவி கடந்த இருபது வருடங்களாக பல்வேறு சீரியல்களை ஒளிபரப்பி முன்னணி வகித்து வந்தது.

ஆனால் சமீப காலங்களாக கலவை விமர்சனத்தை பெற்று வந்த நிலையில் தற்போது  ரசிகர்கள் விரும்பும் வகையில் அதிகபடியான ரொமான்ஸ் காட்சிகள் இடம்பெறும் வகையில் பல சீரியல்களை அறிமுகப்படுத்தி உள்ளார்கள் விஜய் டிவி. சன் டிவி போல விஜய் டிவியும் தொடர்ந்து ஏராளமான சீரியல்களை ஒளிபரப்பி வரும் நிலையில் எந்த சீரியல் டிஆர்பி-யில் முன்னணி வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு போட்டி போட்டு வரும் நிலையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியல் மட்டும் ஒட்டுமொத்த தொலைக்காட்சிகளின் சீரியலை ஓவர்டேக் செய்து டிஆர்பி-யில் முன்னணி நாடகமாக வகித்து வருகிறது. கொரோனாவால் பல பிரச்சனைகளை சந்தித்து வந்த ரோஜா சீரியல் எந்த பிரச்சனையும் இல்லாமல் இனிமேல் ஒளிபரப்பாக உள்ளது.

இப்படிப்பட்ட நிலையில் தொடர்ந்து ரோஜா சீரியல் டிஆர்பி முதல் இடத்தையும் விஜய் டிவி பாரதிகண்ணம்மா சீரியல் இரண்டாவது இடத்தையும் பிடித்து வருகிறது. ஆனால் அனைத்தும் மாறி தற்போது நிலவரத்தின்படி விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி இரண்டு சீரியல்களும் முதல் இரண்டு இடத்தை பிடித்துள்ளது சன் டிவியின் ரோஜா சீரியல் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.