அங்க தொட்டு இங்க தொட்டு கடைசியில் விஜய் டிவியின் அடிமடியிலேயே கை வைத்த சன் டிவி.! கடைசியில் பல்பு வாங்கியது தான் மிச்சம்

Sun tv and Vijay tv :  தொலைக்காட்சிகளிலேயே டிஆர்பி யில் முதலிடத்தில் இருக்கும் தொலைக்காட்சி தான் சன் தொலைக்காட்சி. sun தொலைக்காட்சி, சீரியல் மூலம் தான் டி ஆர் பி யில் முதலிடம் இருந்து வருகிறது சீரியலை அதிகமாக ஒளிபரப்பி வருவதால் படத்தை ஒளிபரப்புவதை குறைத்துக் கொண்டார்கள் படம் மூன்றரை மணி முதல் 6 மணி வரை மட்டுமே என்ற நிலைமை மாறிவிட்டது மற்ற நேரம் அனைத்தும் சீரியல் மட்டும்தான் ஒளி பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

சன் தொலைக்காட்சி 2011ம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரை 18 சீரியல் ஒளிபரப்பி கொண்டிருக்கிறார்கள் அதே எண்ணிக்கையில் தான் தற்பொழுதும் ஓடிக்கொண்டிருக்கிறது இந்த நிலையில் விடுமுறை நாட்கள் வந்தாலே புது படத்தை போடுவார்கள் என மக்கள் ஆவலுடன் இருந்து வந்த நிலையில் தற்பொழுது விடுமுறை நாட்களை கூட விட்டு வைக்காமல் சீரியல் தலைவிரித்து ஆடிக் கொண்டிருக்கிறது.

வாரத்தின் ஆறு நாட்கள் அனைத்து சீரியல்களும் ஒளிபரப்பப்பட்டு வந்த நிலையில் ஞாயிறு இரவு 9.30 மணிக்கு மட்டும் சீரியலை மறுபடியும் ஆரம்பிக்கிறார்கள் என்னதான் சீரியல்களால் மிகவும் பிரபலமடைந்தாலும் சன் தொலைக்காட்சிக்கு ஒரு விபரீத ஆசை வந்தது. மாஸ்டர் செஃப் கனடா மாஸ்டர் செப் அமெரிக்கா என்ற வெளிநாடுகளில் உள்ளது போல் மிகப்பெரிய சமையல் கலைஞர்களை வைத்து ஷோ செய்து பார்த்தார்கள்.

இந்த ஷோவுக்கு விஜய் சேதுபதியை பயன்படுத்தி மிகவும் விளம்பரமும் பண்ணினார்கள். அந்த சமயத்தில் விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சி மிகவும் பிரபலமாக ஓடிக் கொண்டிருந்ததால் அதனை எப்படியாவது ஓவர் டெக் செய்ய வேண்டும் என அதீத ஆசையில் சன் தொலைக்காட்சி இப்படி ஒரு விபரீத முடிவை எடுத்தது. அதன் விளைவு தான் மிகப்பெரிய அளவில் சன் தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோ நடத்தினார்கள்.

இந்த ஷோ வை விஜய் சேதுபதி வைத்து மார்க்கெட்டிங் செய்தாலும் மக்கள் சீரியல்களை விரும்புவது போல் சன் தொலைக்காட்சியில் ரியல் ஷோவை விரும்புவதில்லை மாஸ்டர் செஃப் போன்ற தரமான நிகழ்ச்சியை மக்களால் பார்க்க வைக்க முடிந்த சன் தொலைக்காட்சியால் அதனை தொடர்ச்சியாக கொண்டு வர முடியவில்லை காரணம் மக்கள் சீரியல்களை தான் விரும்பி பார்க்கிறார்கள்.

வேறு வழியே இல்லாமல் சன் தொலைக்காட்சியும் சீரியல் பக்கம் திசை மாறியது பல வருடங்களாக இதுபோல் பல நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி எப்படியாவது ரியாலிட்டி ஷோவில் முன்னிலை வகித்து விடலாம் என எண்ணி இது போல் காரியத்தை செய்து கடைசியில் மொக்கை வாங்கியதுதான் மிச்சம். என்னதான் ரியாலிட்டி ஷோகளில் பின்னடைவை அடைந்தாலும் சீரியலில் அடித்து தூக்கிக் கொண்டிருக்கிறது சன் தொலைக்காட்சி ஆனால் விஜய் தொலைக்காட்சி எப்படியாவது சீரியலில் முன்னேறி விட வேண்டும் என நினைக்கிறார்கள் ஆனால் அவர்களால் முடியவில்லை அதே நேரம் ரியாலிட்டி ஷோக்கலில் விஜய் தொலைக்காட்சி நல்ல வரவேற்பு பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Exit mobile version