விஜய் டிவி சீரியல்களை அடித்து நொறுக்கிய சன் டிவி சீரியல்கள்.! வெளிவந்த இந்த வார TRP லிஸ்ட் இதோ..

தற்பொழுது உள்ள அனைத்து தொலைக்காட்சிகளும் தொடர்ந்து ஏராளமான புதிய சீரியல்கள் அறிமுகப்படுத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள் மேலும் வாரம் வாரம் எந்த தொலைக்காட்சியின் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது என்பதனை தெரிந்து கொள்ளும் வகையில வாரத்தின் இறுதியில் டிஆர்பி ரேட்டிங்கை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

அந்த வகையில் சன் டிவி, விஜய் டிவி இரண்டு தொலைக்காட்சிகளும் தான் டிஆர்பி-யில் போட்டி போட்டுக் கொண்டு இருக்கிறது இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது விஜய் டிவியின் சீரியல்களை ஓவர் டேக் செய்து சன் டிவி சீரியல் முதல் டாப் 5 இடத்தை பிடித்துள்ளது அதாவது வாரம் வாரம் முதல் இடத்தைப் பிடித்து வரும் சன் டிவியின் கயல் சீரியல் முதல் இடத்தை பிடித்தது.

இதனைத் தொடர்ந்து அண்ணன் தம்பியின் பாச உறவினை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் வானத்தைப் போல சீரியல் இரண்டாவது இடத்தினையும், இரண்டு தாரம் திருமணம் செய்து கொண்டால் எவ்வளவு பெரிய சிக்கல்கள் இருக்கும் என்பதை காண்பிக்கும் வகையில் சுந்தரி சீரியல் மூன்றாவது இடத்தினையும், அப்பாவிடம் சிறிய வயதிலிருந்து கிடைக்காத பாசத்தை தன்னுடைய கணவரின் மூலம் அனுபவிக்கும் மகளின் கதையான கண்ணான கண்ணே சீரியல் நான்காவது இடத்தினையும், ஏராளமான காதல் காட்சிகளுடன் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியல் ஐந்தாவது இடத்தினையும் பிடித்துள்ளது.

இப்படிப்பட்ட நிலையில் டிஆர்பியில் கடைசிக்கு தள்ளப்பட்ட விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியல் சில வாரங்களாக தீவிரவாதிகளை வைத்து திரைப்படங்களை ஓவர் டேக் செய்யும் அளவிற்கு சுவாரஸ்யமான கதையம் சத்துடன் ஒளிபரப்பாகி வந்ததால் தற்பொழுது இந்த சீரியல் ஆறாவது இடத்தினை பிடித்துள்ளது.

மேலும் பெண்களை இந்த காலத்திற்கு ஏற்றார் போல் எப்படி எல்லாம் நடத்துகிறார்கள் அதனை எப்படி அந்த பெண்கள் எதிர்கொள்கிறார்கள் என்பதனை வெளிப்படுத்தும் சீரியல் ஆன சன் டிவியின் எதிர்நீச்சல் சீரியல் ஏழாவது இடத்தினை பிடித்துள்ளது இதனை தொடர்ந்து விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் எட்டாவது இடத்தினையும் ராஜா ராணி 2 சீரியல் ஒன்பதாவது இடத்தில், அண்ணன் தம்பி பாச உறவுகளை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் 10வது இடத்தினையும் பிடித்துள்ளது. இவ்வாறு விஜய் டிவி  சீரியல்கள் அனைத்தையும் ஓவர் டேக் செய்து தற்பொழுது டிஆர்பியில் சன் டிவி முன்னணி வகித்து வருகிறது.

Leave a Comment