டிஆர்பி-யில் அடித்து நொறுக்கும் சன் டிவி சீரியல்கள் மற்றும் விஜய் டிவி போட்டியாளர்கள்.! வெளிவந்த சூப்பர் அப்டேட்..

தமிழ் சின்னத்திரை உள்ள அனைத்து தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு ஏராளமான சீரியல்களையும் வித்தியாசமான என்டர்டைன்மெண்ட் நிகழ்ச்சிகளையும் வழங்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.அந்த வகையில் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் தொலைக்காட்சிகள் தான் விஜய் மற்றும் சன் டிவி சேனல்கள்.

இந்த இரண்டு தொலைக்காட்சிகளுக்கும் இடையே டிஆர்பி கடும் போட்டியில் இருந்து வருகிறது நிலையில் தற்போது பிரபலமான டாப் 5 ஃபிக்சன் மற்றும் நான்ஃப்க்சன் பிரபலங்களின் லிஸ்ட் தற்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது இதில் ஃபிக்சன் டாப் ஐந்து இடத்தில் முதல் இடத்தினை கயல் சீரியல் நாயகி சைத்ரா ரெட்டிக்கு கிடைத்துள்ளது. மேலும் சைத்ரா ரெட்டி ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த யாரடி நீ மோகினி சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் தன சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

மேலும் வலிமை உள்ளிட்ட சில முன்னணி நடிகர்களின் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து இரண்டாவது இடத்தினை சுந்தரி சீரியலின் நாயகி சுந்தரி பெற்றுள்ளார் அதாவது கேப்ரில்லா பல மேடை நிகழ்ச்சிகளிலும், வெள்ளித்திரையில் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்காது.

மூன்றாவது இடம் விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் கதாநாயகியாக நடித்த பிரபலமடைந்துள்ள சுசித்ரா பெற்றுள்ளார். இந்த சீரியலில் தன்னுடைய கணவர் சரியில்லாத காரணத்தினால் குடும்ப தலைவியாக ஒட்டுமொத்த பொறுப்புகளையும் பார்த்துக் கொள்கிறா.ர் நான்காவது இடம் ரோஜா சீரியலில் நடித்து வரும் ரோஜாவிற்கும், ஐந்தாவது இடத்தினை பாரதி கண்ணம்மா சீரியலில் கதாநாயகி கண்ணம்மாவுக்கும் கிடைத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து நான் ஃபிக்க்ஷன் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்காக விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் போட்டியாளரான சிவாங்கி தன்னுடைய குழந்தைத்தனமான பேச்சியினாலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார் இவர் முதலிடத்தை பிடித்துள்ளார்.மேலும் இவர் சிவகார்த்திகேயன் திரைப்படமான டான் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகியுள்ளார்.

இரண்டாவது இடம் கலக்கப்போவது யாரு, குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த புகழ் இந்த இடத்தினை பிடித்துள்ளார் இவரும் அஜித்துடன் இணைந்து வலிமை திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இன்னும் சில திரைப்படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மூன்றாவது இடம் கலக்கப்போவது யாரு, குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த பாலாவிற்கு கிடைத்துள்ளது. நான்காவது இடம் விஜய் டிவியில் வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாகி வரும் நீயா நானா கோபிநாத் அவர்களுக்கு கிடைத்துள்ளது. ஐந்தாவது இடம் நீண்ட காலங்களாக விஜய் டிவியில் தொகுப்பாளராக பணியாற்றி வரும் பிரியங்கா பிடித்துள்ளார்.

Leave a Comment