சன் தொலைக்காட்சியில் இருந்து பிரபல கலைஞர்களை வளைத்துப் போட்ட விஜய் தொலைக்காட்சி. அதுவும் யாரை தெரியுமா.

பிரபல தனியார் தொலைக்காட்சியான சன் தொலைக்காட்சி இந்திய அளவில் டி ஆர் பி இல் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறது அனைவருக்கும் தெரிந்ததுதான், தற்பொழுது வரை டி ஆர் பி எல் முதலிடத்தில் இருக்கும் தொலைக்காட்சி ஆகும்.

இந்தநிலையில் விஜய் தொலைக்காட்சியின் அசுர வளர்ச்சி சன் தொலைக்காட்சியை கொஞ்சம் ஆட்டி பார்த்தது, இதைத்தொடர்ந்து ஜீ தமிழ் கலர்ஸ் என பல தொலைக்காட்சி சேனல்கள் வந்தாலும், சன் தொலைக்காட்சி சீரியலில் நம்பர் 1 இடத்தை தக்க வைத்து வருகிறது.

இந்த நிலையில் சன் தொலைக்காட்சியில் பிரபல தொகுப்பாளரான ஆதவன் மற்றும் மதுரை முத்து இருவரும் விஜய் டிவிக்கு மாறிவிட்டதாக தகவல் கிடைத்துள்ளன, கூடிய விரைவில் ஆதவன், மதுரை முத்து ஈரோடு மகேஷ் ஆகியவர்கள் இணைந்து புதிய காமெடி ஷோவில் கலக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment