80களில் முன்னணி நடிகையாக நடித்த நடிகை இனி சன் டிவியில் அன்பே வா சீரியலில்.!

0
anbe vaa
anbe vaa

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர், நடிகைகளாக கலக்கி வந்த ஏராளமானோர் தங்களது இறுதி காலகட்டத்தில் சின்னத்திரைக்கு நடிக்க வருவது வழக்கமாக இருக்கிறது. அதுவும் முக்கியமாக தமிழ் சினிமாவில் ஏராளமான முன்னணி நடிகர்-நடிகைகள் சின்னத்திரையில் நடித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக வலம் வந்த குஷ்பு, ரம்யா கிருஷ்ணன், நளினி, அம்பிகா, ராதிகா, தேவயானி என சொல்லிக்கொண்டே போகலாம். இப்படிப்பட்ட்ட நடிகைகளுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

அந்த வகையில் தற்பொழுது கிட்டத்தட்ட 25 வருடங்களாக சீரியலுக்கு என்றே பெயர் போன ஒரு தொலைக்காட்சியான சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியலில் 80களில் கனவு கன்னியாக வலம் வந்து கொண்டிருந்த மூத்த நடிகை ஒருவர் என்ட்ரியாக உள்ளார் என்ற தகவல் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

டிஆர்பி-யில் முன்னணி சீரியல்களில் ஒன்றாக அன்பே வா சீரியல் வலம்வந்து கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் நடித்து வரும் ஒவ்வொரு கேரக்டருக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் மேலும் இந்த சீரியல் பிரபலமடைய வேண்டுமென்பதற்காக மூத்த நடிகையை களமிறக்க உள்ளார்கள்.

anbe vaa 1
anbe vaa 1

ஆம், அந்த மூத்த நடிகை வேறுயாருமில்லை 80களில் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வளைத்துப் போட்ட இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்த அம்பிகா தான்.  அம்பிகா ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் திருமதி ஹிட்லர் சீரியலில் அம்மா கேரக்டரில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அறிந்த ரசிகர்கள் அன்பே வா சீரியல் நடிகை அம்பிகாவால் மேலும் பிரபலமடைய வேண்டும் என்று கூறிவருகிறார்கள்.