இனிமே நாங்க சொல்றத மட்டும் நீங்க கேட்ட போதும்..! ரஜினிக்கு கட்டளையிட்ட சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம்..!

பொதுவாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் திரைப்படம் என்றாலே அந்த திரைப்படத்திற்கு தேவையான இயக்குனர், இசையமைப்பாளர், நடிகை என அனைவரையுமே கதாநாயகன் தான் தேர்வு செய்வார் அதன்பிறகு அதற்கான பட்ஜெட் என்ன என்பதை ஏற்றுக்கொண்டு தயாரிப்பாளர் முன்வருவார்கள்.

அந்த வகையில் தற்போது தயாரிப்பாளர்கள் அனைவரும் நடிகர்களை கட்டுபடுத்த ஆரம்பித்துவிட்டார்கள் இந்நிலையில் தளபதி விஜய், அஜித், ரஜினி, கமல் போன்ற முன்னணி நடிகர்களின் திரைபடத்தில் தயாரிப்பாளர்கள் தலையிடுவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

ஆனால் ஒரு சில தயாரிப்பாளர்கள் உங்கள் இஷ்டத்திற்கு என்ன வேண்டுமோ செய்து கொள்ளுங்கள் என்று சொல்வது நடிகர்களுக்கு பாசிட்டிவ்வாக இருப்பது மட்டுமில்லாமல் சில சமயங்களில் அதுவே விபரீதத்தை ஏற்படுத்தி வருகிறது.

அந்த வகையில் சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிவா கூட்டணியில் வெளியாகி மாபெரும் வெற்றி பெறும் என நினைத்த நிலையில் கலவையான விமர்சனங்களை பெற்ற திரைப்படம் தான் அண்ணாத்த இவ்வாறு வெளிவந்த இந்து திரைப்படமானது  200 கோடி பட்ஜெட் போட்டு எடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் இத்திரைப்படம் 200 கோடியை வசூல் செய்ததா என்றால் அது இதுவரை தெரியாத விஷயமாகவே இருந்து வருகிறது அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த அடுத்த கால்சீட் அனைத்தையும் சன் பிக்சர் நிறுவனம் வாங்கி விட்டது இதனால் ரஜினிகாந்தை சன் பிக்சர் நிறுவனம் தனது கட்டுக்குள் வைத்துக்கொள்ள போவதாக கோலிவுட் வட்டாரத்தில் அரசல்புரசலாக பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

அதுமட்டுமில்லாமல் தற்போது அண்ணாத்த திரைப்படம் சரியான வெற்றி கொடுக்காத காரணத்தினால் ரஜினிகாந்தின் அடுத்த திரைப்படத்தில் இயக்குனர் முதல் கதாநாயகி வரை சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம்தான் தேர்வு செய்யப் போகிறதாம் அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தை இளம் இயக்குனர் ஒருவர் தான் குறைந்த பட்ஜெட்டில் எடுக்க போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

அதுமட்டுமில்லாமல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிவாரிசு செய்த எந்த ஒரு இயக்குனரையும் சன் பிக்சர் நிறுவனம் ஏற்றுக் கொள்ளவில்லையாம் ஆகையால்  சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் இந்த முறை நாங்கள் சொல்வதை நீங்கள் கேளுங்கள் என்று கூறியதை தொடர்ந்து ரஜினியும் உங்கள் இஷ்டம்போல் ஆகட்டும் என கூறிவிட்டாராம்.

Leave a Comment