ரஜினியின் “அண்ணாத்த” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட தேதியை குறித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம்.! ரசிகர்களே இதைப் பாருங்கள்.

rajini
rajini

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபகாலமாக தமிழ் சினிமாவில் புதிதாக உருவாகி வரும் இயக்குனர்களுக்கு படங்களை அள்ளிக் கொடுக்கிறார் அந்த வகையில் இயக்குனர் சிறுத்தை சிவாவுடன் முதல் முறையாக கூட்டணி அமைத்து அண்ணாத்த என்ற திரைப்படத்தில் நடித்துயுள்ளார்.

இந்த படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத், சென்னை மற்றும் பல இடங்களில் தீவிரமாக எடுக்கப்பட்டது வந்தது அதற்கு காரணம் ரஜினி அவ்வபொழுது உடல்நிலை சரியில்லாத போவதால் இரவு பகல் பார்க்காமல் படக்குழு படத்தின் ஷுட்டிங்கை ஒரு வழியாக முடித்தது.

இந்த படத்தில் ரஜினியுடன் ஏற்கனவே ஹீரோயினாக 80,90 காலகட்டங்களில் நடித்த நடிகைகள் இந்த திரைப் படத்தில் நடிப்பதால் படத்திற்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது மேலும் நயன்தாரா கீர்த்தி சுரேஷ் போன்ற பிரபலங்களும் இந்த திரைப்படத்தில் நடித்து உள்ளனர்.

ரஜினிக்கு சமீபகாலமாக கிராமத்து கதை உள்ள படங்களில் நடிக்க வேண்டும் என ஆசையாக இருந்து வந்த நிலையில் அதனை தற்போது சிறுத்தை சிவா பூர்த்தி செய்து உள்ளார். ரஜினி மிகுந்த சந்தோஷத்தில் இருந்து வருகிறார்.

மேலும் இந்த திரைப்படம் தீபாவளியை தற்போது குறி வைத்துள்ளது அதற்கு முன்பே ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டரை வெளியிட தயாராகி வருகிறது அந்த வகையில் ரஜினியின் அண்ணாதா திரைப்படம் ஃபர்ஸ்ட் லுக் நாளை காலை 11 மணி அளவில் வெளியாகிறதாம் மேலும் மோஷன் போஸ்டர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என அதிகாரபூர்வமாக கூறி உள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.