சன் மியூசிக்கில் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் Vj அஞ்சனா இவர் ஃப்ரீயா விடு, வாழ்த்துக்கள் நீங்களும் நாங்களும் என பல நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியுள்ளார். இவர் தொகுப்பாளினியாக இருந்து கலகலப்பான தனது பேச்சால் பல இளைஞர்களின் மனதில் இடம் பிடித்தவர். மேலும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் மற்றும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
இந்தநிலையில் கடந்த 2014ஆம் ஆண்டு கயல் படத்தில் நடித்த நடிகர் சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார், இந்த நிலையில் தற்போது இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை இருக்கிறது, திருமணம் செய்து கொண்டு சில ஆண்டுகள் தொலைக்காட்சி பணியிலிருந்து விலகி இருந்தார்.

ஆனால் தற்போது மீண்டும் தொலைக்காட்சியில் தொகுப்பாளினி வேலையை செய்துவருகிறார் ஜீ தமிழ் தொலைக்காட்சியில், ஜூனியர் சூப்பர் ஸ்டார் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிவந்தார், இந்த நிலையில் அஞ்சனா தனது குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டு உள்ளார்.
இந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.
