மிரட்டலான மேக்கிங் வீடியோ காணொளியை வெளியிட்ட சுல்தான் படக்குழு.! வைரலாகும் வீடியோ காணொளி.!

கார்த்திக் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் கைதி இந்த திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து கார்த்தி தற்போது சுல்தான் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்த திரைப்படத்தை இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ளார் மேலும் இந்த  திரைப்படத்திற்காக இசையமைப்பாளர் விவேக் மெர்வின் பாடலுக்கும்,டீசருக்கும் இசையமைத்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்திற்கு எஸ் ஆர் பிரபுதயாரித்துள்ளார் இந்நிலையில் கார்த்திக் நடித்துள்ள இந்த திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கார்த்திக்கு ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் யோகி பாபு,நெப்போலியன்,ராமச்சந்திரன் போன்ற தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

சமிபத்தில் தான் சுதன் படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடையே சுமார் 3.9 மில்லியன் பார்வையாளர்களை யூடியூப்பில் பார்க்க வைத்து சாதனை படைத்துள்ளது.இந்நிலையில் தற்போது இந்த படத்தை பற்றி ராஷ்மிகா மந்தனா பேசிய மேக்கிங் வீடியோ ஒன்றை சமூக வலைதள பக்கங்களில் சுல்தான் படக்குழு பதிவு செய்துள்ளது.

இதில் ராஷ்மிகா மந்தனா இந்த திரைப்படத்தில் நடித்த அனுபவத்தை பற்றி கூறி வருகிறார்.

இதோ அந்த மேக்கிங் வீடியோ.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment