சுஜித் அதிர்ச்சி தகவல்.! 5 மணி நேரத்தில் 5 அடிதானா? குழந்தையின் நிலைமை.?

0
98

ஒட்டுமொத்த இந்தியாவின் பிரார்த்தனையாக இருப்பது மணப்பாறையை சேர்ந்த சுஜித் வில்சன் என்ற 2 வயது குட்டி குழந்தை தான். 2 தினங்களுக்கு முன்பு நடுக்காட்டு பட்டியில் வீட்டின் அருகில் உள்ள ஆழ்துளை கிணற்றில் சிறுவன் தவறி விழுந்தான், சுஜித்தை மீட்கும் பணிகள் இரண்டு நாட்களுக்கு மேல் நடந்து வருகிறது ஆனால் இன்னும் மீட்க முடியவில்லை. பல அமைச்சர்கள் அங்கேயே இருந்து மீட்புப் பணியை பார்வையிட்டு வருகிறார்கள் அதுமட்டுமில்லாமல் குழந்தையின் பெற்றோர் களுக்கு ஆதரவாக இருக்கிறார்கள்.

மேலும் தமிழ்நாட்டின்  துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் நடுகாட்டில் மீட்பு பணிகளை மேற்பார்வையிட்டார் அதுமட்டுமில்லாமல் சுஜீத் குடும்பத்திற்கு ஆதரவுகளை தெரிவித்தார் மேலும் தமிழ்நாட்டில் பயன்படுத்தப்படாத ஆழ்துளை கிணறுகள் கணக்கிடப்பட்டு உடனடியாக மூட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவித்துள்ளார்.

தண்ணீர் எதுவும் கிடைக்கவில்லை என்று ஆழ்துளைக் கிணறை அப்படியே போட்டு விட்டனர் அந்த ஆழ்துளைக் கிணற்றின் மேல் மூடப்பட்டிருந்த மண் மழையின் காரணமாக அடித்து செல்வதால் அந்த இடம் பாதுகாப்பானது இல்லை, அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் எதிர்பாராதவிதமாக அந்த ஆழ்துளைக்கிணற்றில் விழுந்துவிட்டான்.

குழந்தையை மீட்க ஆழ்துளைக் கிணற்றுக்கு பக்கத்தில் 2 ரிக் வண்டி கொண்டு ஒரு மீட்டர் அளவிற்கு பக்கத்தில் சுரங்கப்பாதை போட்டுள்ளார்கள், ஆனால் இதுவரை 40 அடிவரை தோண்டப்பட்டுள்ளது, அதுவும் ஐந்து மணி நேரத்தில் 5 அடிதான் தோண்டப்பட்டுள்ளது ஏனென்றால் மிகவும் கடினமான பாறை இருப்பதால் ரிக் வண்டியின் பிளேட் அதிகமாக சேதம் அடைவதால் அடிக்கடி பழுது பார்க்கப்படுகிறது இன்னும் 45 அடிகள் தோண்டுவதற்கு 5 மணி நேரமாவது ஆகும் என அறிவித்துள்ளார்கள்.

இவ்வாறு கடினமான பாறை இருப்பதால் 5 மணி நேரத்தில் 5 அடிதான் சுரங்கம் அமைத்து உள்ளார்கள் இது அனைவருக்கும் வேதனையை அளித்துள்ளது, ஆனால் மீட்பு குழு மிகவும் போராடி வருகிறார்கள். சுஜித் மீண்டுவர ஆங்காங்கே பிரார்த்தனைகள் செய்து வருகிறார்கள், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சுஜித் மீண்டு வர வேண்டும் எனவும் துள்ளி குதிக்க வேண்டும் எனவும் ஆசைப்படுகிறார்கள் இது நிறைவேற வேண்டும் என நாமும் பிரார்த்தனை செய்வோம்.