குழந்தை சுஜித் மூச்சு இல்லை.? அசைவே இல்லை.?, அதிர்ச்சியை கிளப்பிய அமைச்சர்.!

0
sujith
sujith

ஒட்டுமொத்த இந்தியாவின் பிரார்த்தனையாக இருப்பது மணப்பாறையை சேர்ந்த சுஜித் வில்சன் என்ற 2 வயது குட்டி குழந்தை தான். 2 தினங்களுக்கு முன்பு நடுக்காட்டு பட்டியில் வீட்டின் அருகில் உள்ள ஆழ்துளை கிணற்றில் சிறுவன் தவறி விழுந்தான், சுஜித்தை மீட்கும் பணிகள் இரண்டு நாட்களுக்கு மேல் நடந்து வருகிறது ஆனால் இன்னும் மீட்க முடியவில்லை. பல அமைச்சர்கள் அங்கேயே இருந்து மீட்புப் பணியை பார்வையிட்டு வருகிறார்கள் அதுமட்டுமில்லாமல் குழந்தையின் பெற்றோர் களுக்கு ஆதரவாக இருக்கிறார்கள்.

மேலும் தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் நடுகாட்டில் மீட்பு பணிகளை மேற்பார்வையிட்டார் அதுமட்டுமில்லாமல் சுஜீத் குடும்பத்திற்கு ஆதரவுகளை தெரிவித்தார் மேலும் தமிழ்நாட்டில் பயன்படுத்தப்படாத ஆழ்துளை கிணறுகள் கணக்கிடப்பட்டு உடனடியாக மூட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவித்துள்ளார்.

தண்ணீர் எதுவும் கிடைக்கவில்லை என்று ஆழ்துளைக் கிணறை அப்படியே போட்டு விட்டனர் அந்த ஆழ்துளைக் கிணற்றின் மேல் மூடப்பட்டிருந்த மண் மழையின் காரணமாக அடித்து செல்வதால் அந்த இடம் பாதுகாப்பானது இல்லை, அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் எதிர்பாராதவிதமாக அந்த ஆழ்துளைக்கிணற்றில் விழுந்துவிட்டான்.

குழந்தையை மீட்க ஆழ்துளைக் கிணற்றுக்கு பக்கத்தில் 2 ரிக் வண்டி கொண்டு ஒரு மீட்டர் அளவிற்கு பக்கத்தில் சுரங்கப்பாதை போட்டுள்ளார்கள், ஆனால் இதுவரை 40 அடிவரை தோண்டப்பட்டுள்ளது, அதுவும் ஐந்து மணி நேரத்தில் 5 அடிதான் தோண்டப்பட்டுள்ளது ஏனென்றால் மிகவும் கடினமான பாறை இருப்பதால் ரிக் வண்டியின் பிளேட் அதிகமாக சேதம் அடைவதால் அடிக்கடி பழுது பார்க்கப்படுகிறது இன்னும் 45 அடிகள் தோண்டுவதற்கு 5 மணி நேரமாவது ஆகும் என அறிவித்துள்ளார்கள்.

இந்த நிலையில்அமைச்சர் விஜய பாஸ்கர் குழந்தை சுஜித்திற்கு மூச்சும் இல்லை அசைவும் இல்லை என அறிவித்துளர், இதனால் ஆங்ககே பிரத்தனை செய்யும் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.