அட, தல அஜித்துடன் இணைந்து நம்ம பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலம் திரைப்படத்தில் நடித்துள்ளாரா.! எந்த திரைப்படம் தெரியுமா.?

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்தவர் பவர் தல அஜித்.இவர் நடிப்பில் கடைசியாக நேர்கொண்ட பார்வை திரைப்படம் வெளிவந்து வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பெற்றது. இத்திரைப்படம் வெளியாகி ஒரு வருடத்திற்கு மேலாகியும் தற்போது வரையிலும் அஜித் நடிப்பில் எந்த படமும் வெளிவரவில்லை.

இந்நிலையில் தல அஜித் ஒரு வருடத்திற்கு மேலாக வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். தல அஜித்தின் 60வது திரைப்படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்து விட்டதாகவும் போஸ்டர், புரோமோஷன் வேலைகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் இதுவரையிலும் இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர். டீசர் எதுவும் இன்னும் வெளிவரவில்லை.இது தான் ரசிகர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. எனவே அஜித்தின் பிறந்த நாள் அன்று திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று கூறி இருந்தார்கள் ஆனால் ஒன்றும் வெளிவரவில்லை.

இந்நிலையில் தல அஜித்துடன் பாண்டியன் ஸ்டோர் சீரியல் பிரபலம் ஒருவர் திரைப்படம் ஒன்றில்  தல அஜித்துடன் இணைந்து நடித்துள்ளதாக கூறப்படுகிறது. அவ்வப்போது அவருடன் எடுத்துக் கொண்ட பழைய புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

ஆம், தல அஜித் நடிப்பில் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த திரைப்படம் தான் வாலி. இத்திரைப்படத்தின் ஷூட்டிங்கின் போது பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மூலம் பிரபலமடைந்த தனம் என்ற கேரக்டரில் நடித்து வரும் சுஜிதா எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ வந்த புகைப்படம்.

sujith
sujith
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment