பலருக்கும் தெரியாத முன்னணி நடிகை சுஜாதாவின் மரணம்.! கண்ணீரின் மறுபக்கம்

திரையுலகில் பிரபல முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் நடிகை சுஜாதா ஆவார். இவர் 1971ஆம் ஆண்டில் தபஸ்வினி என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார் .இதனை தொடர்ந்து தமிழில் அவர்கள்,கடல் மீன்கள், ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது, மயங்குகிறாள் ஒரு மாது, அமைதிப்படை,  விதி,  வில்லன் உட்பட இன்னும் ஏராளமான படங்களில் நடித்து திரையுலகில் பிரபலம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் இலங்கையை சேர்ந்தவர் ஆவார் இவருடைய தந்தை சத்ய மேனன், இவருடைய தாய் காஞ்சனா தேவி ஆவார். சுஜாதாவின் தந்தை கேரளாவில் தெல்லிப்பழை மகாஜன கல்லூரியில் விலங்கியல் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். அதன் பிறகு இலங்கையில் காளியின் பணிபுரிந்தார் அங்கு சுஜாதா பத்தாம் வகுப்பு வரை படித்து வந்தார். சுஜாதாவின் பதினான்காவது வயதில் குடும்பத்துடன் கேரளாவில் செட்டில் ஆகிவிட்டனர்.

இந்தநிலையில் 1977ஆம் ஆண்டில் ஜெயகர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இவருக்கு சஜித் என்ற ஒரு மகனும் திவ்யா என்ற ஒரு மகளும் உள்ளனர் இவருடைய மகள் திவ்யா மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.

சுஜாதா அவர்கள் கமல்ஹாசன், நாகேஸ்வரராவ், சிவாஜி கணேசன் ,முத்துராமன், சிவகுமார், ரஜினிகாந்த், சோபன்பாபு, சிரஞ்சீவி, மோகன் பாபு உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்து தனது வெற்றி படங்களை தொடர்ந்து தந்து கொண்டிருந்தார் தற்பொழுது வரையிலும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

sujatha
sujatha

இவருடைய திருமணத்திற்கு பிறகு இவர் படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டார். தனக்கென ஒரு வாழ்க்கை வேலியை அமைத்து கொண்டு தனது குடும்பத்தினருக்காக வாழ்ந்து வந்தார். இவருக்கு கால்ஷீட் கேட்பதற்கும் , கதை சொல்லவும் பெரிய சவாலாக இருந்தது இவரை பார்க்கவே முடியவில்லை என பலர் கூறியுள்ளனர்.

இந்த நிலையில் சுஜாதா 2011ஆம் ஆண்டில் இறந்துவிட்டார். அந்த நிலையில் தமிழகத்தில் பொதுத்தேர்தல் தருணம், பிரசாரம், தேர்தல், ஆட்சி மாற்றம் என பலவகையான பிரச்சனைகள் இருந்து வந்ததால் சுஜாதா இறந்தது பெருபாலோர்கு தெரியாமல் போனது.

sujatha
sujatha

Leave a Comment