ரஜினியின் 172 படத்தை இயக்க ராஜ தந்திரம் வேலை பார்க்கும் சுதா கொங்கராவ் .? போற போக்க பாத்தா இது உண்மையாகிடும் போலையே..

தமிழ் திரை உலகில் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தோடு பல வருடங்களாக வலம் வரும் நடிகர் தான் ரஜினிகாந்த் இவர் தற்பொழுது ஜெயிலர் திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தில் இவருடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன்,தமன்னா,விநாயகன்,மோகன்லால்,யோகி பாபு போன்ற முக்கிய பிரபலங்கள் நடித்து வருவதால்.

இந்த திரைப்படம் எப்பொழுது முடிந்து வெளியாகும் என ரசிகர்கள் காத்துக் கொண்டே இருக்கிறார்கள்.இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் லால் சலாம் திரைப்படத்திலும் நடிக்க இருக்கிறார்.இந்தத் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ரஜினிகாந்த்.

தனது 171 வது திரைப்படத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் கைகோர்க்க இருக்கிறார் எனவும் தகவல் வெளியாகி வருகிறது இதனை தொடர்ந்து பார்த்தால் இந்த திரைப்படத்தை லலித்குமார் மற்றும் சன் பிக்சர்ஸ்,ஹொம்பாலே போன்ற நிறுவனங்கள் இந்தத் திரைப்படத்திற்காக போட்டி போட்டு வருகிறதாம்.தற்பொழுது ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கரின் ஆசிரமத்தில் தியானத்திற்காக தங்கி இருக்கிறாராம்.

இதனை தொடர்ந்து நேற்று ஹொம்பாலே நிறுவனதாரும் இயக்குனர் சுதா கொங்கராவ் ரஜினிகாந்தை நேரில் சந்தித்துள்ளார்களாம் அதாவது ரஜினிகாந்த் அவரது 172வது திரைப்படத்தை சுதா கொங்கராவ் இயக்க பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் இந்த தகவல் தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

ஏற்கனவே சுதா கொங்கராவ் அவர்கள் ஹொம்பாலே நிறுவனத்திற்கு ஒரு திரைப்படத்தை இயக்க உள்ளதாக ஒரு தகவல் இணையத்தில் வைரலாகி வந்த நிலையில் தற்போது இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருவதால் இது உண்மையாக கூட இருக்கலாம் என ஒரு சில ரசிகர்கள் கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

rajini
rajini

Leave a Comment