சூர்யாவை தொடர்ந்து கார்த்தி திரைப்படத்தை இயக்கும் சுதா கொங்கரா.?

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகராக வலம் வருபவர் கார்த்தி இவர் கடந்த சில வருடங்களாக ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி நல்ல திரைப்படங்களை கொடுத்து வருகிறார் அந்த வகையில் பார்த்தால் இவரது நடிப்பில் இறுதியாக வெளியான சுல்தான் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று விமர்சன ரீதியாக நல்ல விமர்சனத்தை பெற்று சாதனை படைத்தது அதுமட்டுமல்லாமல் வசூலில் அதிகம் வசூல் செய்து மாஸ் காட்டி விட்டது என்று தான் கூற வேண்டும்.

மேலும் கார்த்தி சுல்தான் திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் மணி ரத்தனம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படப்பிடிப்பு தற்போது வரை 70 சதவீதம் முடிந்துள்ள நிலையில் ஒரு சில காரணங்கள் குறித்து படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது மீண்டும் எப்போது தொடங்கும் என பல ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

இதனை தொடர்ந்து கார்த்தி தனது 22-வது திரைப்படத்தை இயக்குனர் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் சர்தார் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

இந்த திரைப்படங்களை தொடர்ந்து கார்த்தி சூரரைப் போற்று திரைப்படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கத்தில் புதிதாக ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்பே தகவல் வெளியான நிலையில் தற்போது அது குறித்து ஒரு தகவல் கிடைத்துள்ளது.

அதாவது சுதா கொங்கரா உடன் கார்த்தி கூட்டணி சேர உள்ளார் என தகவல் வெளியாகி இருந்த நிலையில் நடிகர் காளி வெங்கட் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த தகவல்கள் அனைத்தும் வதந்தி என்று தெரிவித்துள்ளார் மேலும் இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் இது மட்டும் உண்மையாக இருந்தால் நன்றாக இருந்திருக்கும் எப்பொழுது சுதா கொங்கரா கார்த்தியை வைத்து திரைப்படம் இயக்குவார் என பல கேள்விகளை சமூக வலைதளப் பக்கங்களில் எழுப்பி வருகிறார்கள்.

Leave a Comment