என்னதான் இளம் நடிகர்களை வைத்து திரைப்படம் இயக்கினாலும் எனக்கு இவர்மேல தான் கிரஷ்..!

sudha kongara like actor: இறுதிசுற்று திரைப்படத்தின் மூலம் தென் இந்திய சினிமாவையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர் தான் இயக்குனர் சுதா கொங்கரா.  இந்த திரைப்படத்தில் மாதவன் மற்றும் ரித்திகா சிங் ஆகியோர்கள் நடித்துள்ளார்கள் மேலும் இந்த திரைப்படம் முழுக்க முழுக்க குத்து சண்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமாகும்.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து சமீபத்தில் சூர்யாவை வைத்து சூரரைப்போற்று எனும் திரைப்படத்தை இயக்கி மாபெரும் வெற்றி அடைந்து உள்ளார்.  இவ்வாறு உருவான இந்த திரைப்படமானது இணையத்தில் வெளியாகி மாபெரும் வசூலை செய்தது.

இந்த திரைப்படம் தியேட்டரில் வெளி வந்தால் கூட இந்த அளவிற்கு வசூல் செய்யுமா என்றால் அது கேள்வி குறிதான். இந்த திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு விமான அதிபரின் வாழ்க்கை வரலாறு.

பொதுவாக சுதா கொங்கரா எடுக்கும் திரைப்படங்கள் மிகவும் வித்தியாசமான கதையம்சம் இருப்பது மட்டுமல்லாமல் ரசிகர்களின் அடுத்தடுத்த காட்சிகள் என்ன என சிந்திக்கும் வகையில் இருப்பதன் காரணமாக தற்சமயம் பல பிரபலமான முன்னணி நடிகர்களும் இவருடைய திரைப்படத்தில் நடிக்க ஆசைப் படுகிறார்கள்.

அந்த வகையில் சூரரை போற்று திரைப்படத்தை தொடர்ந்து தல அஜித்தை வைத்து சுதா கொங்கரா ஒரு திரைப்படத்தை இயக்க உள்ளாராம். இந்நிலையில் சுதா கொங்கரா நான் பல திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் எனக்கு பிடித்தது எனவோ இந்த நடிகர் தான் என பேட்டியில் கூறியுள்ளார்.

அவர் வேறு யாரும் கிடையாது பிரபல நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் இவர் சிறு வயதிலேயே சூப்பர் ஸ்டார் உடைய தீவிர ரசிகராம். மேலும் இவருடைய திரைப்படம் திரையில் வரும் போது முதல் டிக்கெட் எடுத்து பார்க்க வேண்டும் என அவருடைய தந்தையிடம் சண்டை போடுவாராம்.

90s காலகட்டத்தில் கமலின் மீது ஆசை கொண்ட பெண்கள் ஏராளம்.  ஆனால் சுதா கொங்கரா விற்கு ரஜினிகாந்தை தான் மிகவும் ரொம்ப பிடிக்குமாம்.

rajini
rajini

Leave a Comment