தமிழ் சினிமா உலகில் இளம் இயக்குனர்கள் ஒரு பக்கமும் சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து அசத்தி வர மறுப்பக்கம் பெண் இயக்குனர்கள் விரல் விட்டு என்னும் அளவிற்கு கம்மியாக இருந்தாலும் அவர்களும் தொடர்ந்து நல்ல படங்களை கொடுத்த அசித்து வருகின்றனர் அதிலும் குறிப்பாக இயக்குனர் சுதா கொங்கரா தரமான படங்களை கொடுத்து அசத்தியுள்ளார்.
இவர் மணிரத்தினத்திலும் உதவியாளர் இருந்து முழுதையும் கற்றுக்கொண்டு வெளியே வந்து இறுதிச்சுற்று என்ற படத்தை இயக்கி இயக்குனர் அவதாரம் எடுத்தார். முதல் படமே அவருக்கு ஹிட் படமாக அமைந்தது அதனை தொடர்ந்து சூர்யாவை சூரரைப் போற்று என்னும் படத்தை எடுத்தவர். படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று அடித்து நொறுக்கியது.
இந்த படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்ததோடு மட்டுமல்லாமல் தேசிய விருது வாங்கி அசத்தியது இதனால் சுதா கொங்காரா செம்ம சந்தோஷத்தில் இருந்து வருகிறார். இந்த படத்தை ஹிந்தியில் தற்போது எடுத்து வருகிறார் அதில் சூர்யாவுக்கு பதிலாக அக்ஷய்குமார் நடித்து வருகிறார். இருப்பினும் சூர்யா இந்த படத்தில் ஒரு சின்ன கேமியோ நடித்து வருவதாக சொல்லப்படுகிறது.
இந்த படத்தை தொடர்ந்து சுதா கொங்கரா அடுத்ததாக சூர்யாவை வைத்து ஒரு படம் பண்ண இருக்கிறார். இப்படி இருக்கின்ற நிலையில் ஒரு தகவல் கிடைத்துள்ளது அதாவது இயக்குனர் சுதா கொங்கரா தற்பொழுது ஹிந்தியில் சூரரை போற்றுப் படத்தின் ரீமேக்கை பண்ணி வருகிறார் இந்த படத்திற்காக எவ்வளவு சம்பளம் வாங்கி உள்ளார் என்பது குறித்து தகவல் கிடைத்துள்ளது.
அதன்படி பார்க்கையில் அந்த படத்திற்காக சுமார் 25 கோடி சம்பளம் வாங்கியுள்ளார் என சொல்லப்படுகிறது. விரல் விட்டு என்னும் அளவிற்கு படங்களை இயக்கியிருந்தாலும் தற்போது அவரது மார்க்கெட் உச்சத்தில் இருக்கின்ற காரணத்தினால் அவரது சம்பளம் அதிகரித்து உள்ளதாக கூறப்படுகிறது.