திடீரென்று மணிரத்னம் ரசிகர்களுக்கு அதிர்ச்சி பதிவைப் பகிர்ந்த சுஹாசினி.! என்ன காரணத்திற்காக பகிர்ந்துள்ளார் பார்த்தீர்களா.!

என்னதான் தமிழ் திரையுலகில் பல இயக்குனர்கள் தங்கலுக்கு பிடித்த மாதிரி திரைப்படங்களை இயக்கினாலும் மக்களிடம் வெற்றி காண முடியவில்லை ஆனால் பல வருடங்களாக தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் மணிரத்னம் இவர் அந்த காலத்திலேயே பல முன்னணி நடிகர்களை வைத்து பல சூப்பர் ஹிட்டடித்த திரைப்படங்களை ரசிகர்களுக்கு கொடுத்தார்.

அந்த வகையில் பார்த்தால் இவர் இயக்கிய திரைப்படங்கள் விமர்சன ரீதியாக மட்டுமல்லாமல் அந்த காலத்தில் வசூலிக்கும் அனைத்து திரைப்படங்களையும் ஓரங்கட்டி விடும் அந்த அளவிற்கு இவர் திரைப்படங்களை இயக்குவார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமல்லாமல் பல முறை பல இயக்குனர்கள் பொன்னின் செல்வன் வரலாற்றை படமாக்க முயற்சித்தனர் ஆனால் அவர்களால் படத்தை இயக்க முடியவில்லை ஆனால் மணிரத்னம் தனியாக தற்பொழுது பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் இந்த திரைப்படத்தில் பல சினிமா பிரபலங்களையும் நடிக்க வைத்து வருகிறார் இந்நிலையில் ஊரடங்கு காலத்தில் படம் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் மணிரத்னம் இந்த திரைப்படம் மட்டுமல்லாமல் ஒரு சில திரைப் படங்களையும் இயக்கி வருகிறார் என சமீபத்தில் ஒரு தகவல் ரசிகர்களிடையே மிக வேகமாக சமூக வலைதள பக்கங்களில் வைரலானதை நாம் பார்த்திருப்போம்.சமீபத்தில் மணிரத்னம் பிறந்தநாளை முன்னிட்டு ட்விட்டரில் மணிரத்னம் இணைந்துள்ளதாக ஒரு தகவல் வெளியானது மட்டுமல்லாமல் எனது பிறந்தநாளில் நான் ட்விட்டரில் இணைந்து உள்ளேன் என பதிவும் போடப்பட்டது.

ஆனால் இதனைப் பற்றி மணிரத்னம் மனைவியும் பிரபல இயக்குனருமான சுஹாசினி மணிரத்தினம் எந்த ஒரு சமூக வலைதள பக்கங்களிலும் ஈடுபடவில்லை அதுமட்டுமல்லாமல் இந்த கணக்கை யாரோ போலியாக உருவாக்கியுள்ளார்.ரசிகர்கள் யாரும் இந்த போலியான கணக்கை நம்ப வேண்டாம் இதுவரை மணிரத்தினம் எந்த ஒரு சமூக வலைதள பக்கங்களில் அதிக ஆர்வம் காட்ட மாட்டார் என தனது சமூக வலைதளப் பக்கங்களில் அவர் ஒரு பதிவை போட்டுள்ளார்.

Leave a Comment