திடீரென லோகேஷ் கனகராஜ், ரஜினி சந்திப்பு.? விரைவில் வெளியாகும் தலைவர் 171 திரைப்பட அப்டேட்…

குறுகிய படங்களை மட்டும் இயக்கி தற்போது முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி அதன் பிறகு கைதி, மாஸ்டர், விக்ரம், என தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து தற்போது தயாரிப்பாளர்களால் தேடப்படும் இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இவர் தற்போது விஜய்யை வைத்து லியோ திரைப்படத்தை இயக்கி வருகிறார் இந்த படத்தில் விஜய் உடன் இணைந்து திரிஷா, பிரியா ஆனந்த், சஞ்சய் தத், கௌதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மிஸ்கின், சாண்டி மாஸ்டர், உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திர பட்டாள்கள் இந்த திரைப்படத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்னும் 60 நாட்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிய உள்ளதாக இயக்குனர் லோகேஷ் அறிவித்திருப்பதாக சில தகவல் வெளியாகியிருந்தது.

அது மட்டுமல்லாமல் காஷ்மீரில் படப்பிடிப்பை முடித்துவிட்டு அடுத்ததாக படக்குழு சென்னை திரும்ப இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிகர் ரஜினியை திடீரென சந்தித்திருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் அடுத்ததாக தலைவர் 171 வது திரைப்படத்தை லோகேஷ் தான் இயக்கப் போகிறார் என்று சில தகவல் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. மேலும் நடிகர் ரஜினி அவர்கள் தற்போது நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி விட்டதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து அடுத்ததாக தலைவர் 170-வது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் இந்த திரைப்படத்தை டிஜே ஞானவேல் அவர்கள் இயக்க இருப்பதாக லைக்கா நிறுவனம் அறிவித்திருந்தது இதனை தொடர்ந்து தலைவர் 171 வது திரைப்படத்தை இயக்குனர் லோகேஸ் கனகராஜ் இயக்கப் போகிறார் என்று சில தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. ஆனால் இது உண்மையான தகவலாக வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment