திடீரென்று கங்கனா ரனாத்தின் ட்விட்டர் பக்கம் முடக்கம்.! இணையத்தளத்தில் வெளியான அதிரடி தகவல்கள்.!

0

தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகைகளும் இருக்கிறார்கள் ஒரே ஒரு படத்தில் நடித்து பிரபலமாகிய நடிகைகளும் இருக்கிறார்கள். அந்த வகையில் தமிழ் சினிமாவிற்கு தாம் தூம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதனைத் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்து வந்தவர் தான் கங்கனா ரனாத்.

இவர் இந்த திரைப்படத்தை தொடர்ந்து ஒரு சில திரைப் படத்தில் நடித்தாலும் அவருக்கு சரியான வெற்றியை கொடுக்கவில்லை.இதனால் பாலிவுட் பக்கம் திரும்பி அங்கு ஒரு சில திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறிவிட்டார்.

மேலும் இவர் தற்போது முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை வைத்து எடுக்கப்படும் தலைவி திரைப்படத்தில் அவரது கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.இந்த திரைப்படத்தின் புகைப்படங்கள்  மற்றும் வசனங்கள் எல்லாம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து தற்போது இந்த திரைப் படத்தில் கங்கனா விருவிருப்பாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் அவரது சமூக வலைத்தளமான டுவிட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாம் ஆனால் என்ன காரணம் என்று தெரியவில்லை இதனை அடுத்து இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் எதற்காக அவரது டுவிட்டர் பக்கத்தை முடக்கினார்கள் என பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

Kangana Ranaut
Kangana Ranaut

ஒரு சில ரசிகர்கள் எதற்கு இப்படி எல்லாம் செய்கிறார்கள் அவர் ரசிகர்களிடையே பிரபலம் ஆவது பிடிக்கவில்லையா என ஆத்திரம் அடைந்து பல்வேறு விதமாக ரசிகர்கள் பேசி வருகிறார்கள்.