ரஜினியின் “அண்ணாத்த” படத்திற்கு வந்த திடீர் சோதனை.? ரசிகர்கள் ஏமாற்றம்.! என்ன நடந்துள்ளது தெரியுமா.?

0

சமீபகாலமாக கிராமத்து கதைகளை எடுத்து மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளவர் சிறுத்தை சிவா. தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்தை வைத்து தொடர்ந்து மூன்று கிராமத்து படங்களை கொடுத்து வெற்றி கண்டவர். அதன் காரணமாக சினிமா உலகிலும் நல்ல பெயரைப் பெற்றுக் கொண்ட இயக்குனர் சிவாவுக்கு  திடீரென ரஜினி அழைப்பு விடுத்தார் இதை எடுத்து ரஜினிக்கு ஒரு கிராமத்து கதையை சொல்லி ஓகே வாங்கினார்.

அந்தத் திரைப்படத்திற்கு “அண்ணாத்த” என பெயர் சூட்டப்பட்டது. இந்த இப்படத்தின் சூட்டிங் ஹைதராபாத் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு ஒரு வழியாக முடிந்தது. தற்போது பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது ஆனால் இதற்கு முன்பாகவே அண்ணாத்த திரைப்படம் தீபாவளிக்கு வெளிவரும் என சமீபத்திய செய்திகள் வெளியானது.

அந்த அறிவிப்பால் ரஜினி ரசிகர்கள் சந்தோஷத்தில் இருந்து வந்த நிலையில் ரஜினியின் அண்ணாத்த படம் தீபாவளி அன்று வெளியாக வாய்ப்பு இல்லை என பிரபல பத்திரிகையாளர் ஒருவர் திடீரென கூறியுள்ளார். மேலும் அண்ணாத்த திரைப்படம் அடுத்த வருடம் 2022ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே அஜித்தின் வலிமை படம் தீபாவளிக்கு வரும் என கூறி பின்வாங்கி வலிமை அடுத்த வருடம் 2022ஆம் ஆண்டில் பொங்கலில் வெளியாகிவிடும் என கூறப்பட்ட நிலையில்சூப்பர் ஸ்டார் ரஜினி படமும் இவ்வாறு தள்ளிப்போய் அடுத்த வருடம் பொங்கலன்று வெளியாகும் என கூறப்படுகிறது.

இச்செய்தி தற்போது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. ரஜினியின் அண்ணாத்த படமும், அஜித்தின் வலிமை படமும் ஒன்று ஒன்று மோதுவது மோதுவதான் சரி என கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர். annatha

annatha