தமன்னாவுக்கு முளைத்த திடீர் மீசை.! இணையதளத்தில் வைரலாகும் வீடியோ.!

actress-tamannaah
actress-tamannaah

தமன்னா மீசையுடன் இருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது இதனால் ரசிகர்கள் கிண்டலும் கேலியும் செய்து வருகிறார்கள்.

நடிகை தமன்னா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர்.  நடிகை தமன்னா டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் இல் புதிய தொடர் ஒன்றில் நடித்துள்ளார்.  அதனால்தான் விளம்பரத்திற்கு வித்தியாசமான முறையில் மீசை வைத்து முயற்சி செய்துள்ளார்.

இந்த தொடர் நவம்பர் மாதம் வெளியாக வேண்டியது ஆனால் நீண்ட காலத்திற்குப் பிறகு இப்போதுதான் வெளியாகிறது.  இந்த நிலையில் தமன்னா மீசையுடன் இருக்கும் விளம்பரம் ஒன்றை வெளியிட்டு வருகிறார்.  அதில் தன்னுடைய பெயர் தமன்னா இல்லை என்றும் மாணிக்கம் என்றும் கூறியுள்ளார்.

இந்த வீடியோ ரசிகர்களை ரசிக்க வைத்தது மட்டுமல்லாமல் கிண்டலும் செய்து வருகிறார்கள்.  இந்திரா சுப்பிரமணியம் இயக்கத்தில் தமன்னா நடிப்பில் உருவாகியுள்ள திரில்லர் வெப்சீரிஸ் நவம்பர் ஸ்டோரி ரிலீஸுக்காக தான் இப்படி ஒரு விளம்பரத்தில் நடித்துள்ளார்.

actress-tamannaah
actress-tamannaah

அந்த விளம்பரத்தில் தன்னுடைய வெப்சீரிஸ் பார்க்கும்படி கெஞ்சுவது போல் நடித்துள்ளார் இதைப்பார்த்த ரசிகர்கள்.  ஜெயம் ரவியின் பூமி, காஜல் அகர்வாலின் லைவ் டெலிகாஸ்ட் டெடி என பல சூப்பர் ஹிட் திரைப்படங்கள் ஹாட்ஸ்டாரில் இருக்கும் நிலையில் நாங்கள் ஏன் உங்கள் நவம்பர் ஸ்டோரி சீரியஸ் பார்க்க வேண்டும் என ஒருவர் கேட்டுள்ளார்.

மேலும் மற்றொரு வீடியோவில் தான் மீசை வைக்க எவ்வளவு சிரமப் பட்டதை வெளிப்படுத்தும் விதமாக வீடியோ மூலம் வெளியிட்டுள்ளார்.  அதுமட்டுமில்லாமல் 11th ஹவர் என்ற புதிய வெப்சீரிஸிலும் நடிகை தமன்னா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்