பிக்பாஸ் அர்ச்சனாவிற்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு.!! மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில்.. வைரலாகும் புகைப்படம்..

0

ரசிகர்கள் மத்தியில் நடிகைகளுக்கு எந்த அளவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறதோ அதேபோல் தொகுப்பாளர்களுக்கும்  ரசிகர்கள் மத்தியில் தனி இடம் உள்ளது. அந்த வகையில் தொகுப்பாளினியாக ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர் தான் அர்ச்சனா. இவர் பணியாற்றிய தொலைக்காட்சிகள் இல்லை என்று தான் கூற வேண்டும்.

சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் என பிரபலமடைந்து உள்ள ஏராளமான தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி உள்ளார்.அதிலும் முக்கியமாக ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் பல நிகழ்ச்சிகளை தொடர்ந்து தொகுத்து வழங்கி வந்த இவர் சில வருடங்கள் கழித்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்றார்.

ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சி இவருக்கு ஒரு நெகட்டிவ் பாயிண்ட்டாக அமைந்து உள்ளது ஏனென்றால் இந்நிகழ்ச்சிக்குப் முன்பு அர்ச்சனா ஒரு சிறந்த தொகுப்பாளினி மிகவும் காமெடியாக நிகழ்ச்சியைக் கொண்டு செல்வார் என்று அனைவரும் நினைத்து வந்த நிலையில் இவரின் உண்மை முகத்தை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் வெறுப்பை சேமித்தார்.

அதுவும் முக்கியமாக அன்பு ஜெயிக்கும் என்ற ஒன்று பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தது இந்நிகழ்ச்சிக்குப் பிறகு இவர் தொடர்ந்து தனது மகளுடன் யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராமில் வீடியோவை வெளியிடுவதால் ரசிகர்கள் ஏராளமானோர் கலாய்த்து வருகிறார்கள். அதோடு, தற்பொழுது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

vj archana
vj archana

இப்படிப்பட்ட நிலையில் அர்ச்சனா தனது இன்ஸ்டா பக்கத்தில் அதிர்ச்சித் தகவல்  ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது இவரின் மூளைப் பக்கத்தில் சில பிரச்சினைகள் இருப்பதாகவும் அதனால் திடீரென்று அறுவை சிகிச்சை செய்ய இருப்பதாகவும் பதிவுசெய்துள்ளார். அதன் பிறகு அறுவை சிகிச்சை முடிந்த உடன் என் நிலைமையை பற்றி எனது மகள் அறிவிப்பால் எனவும் கூறியுள்ளார்.