சிம்புவின் 10 தல படத்தில் இப்படி ஒரு டுவிஸ்டா..? அட இதை யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டாங்களே..!

0
simbu-10-thala
simbu-10-thala

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக கொடி கட்டி பறந்து வரும் ஒரு நடிகர் என்றால் அவர் சிம்பு தான் அந்த வகையில் இவருடைய நடிப்பில் சமீபத்தில் மாநாடு என்ற திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றது மட்டுமில்லாமல் வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்தது.

மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் சிம்பு அவர்கள் தன்னுடைய அடுத்த திரைப்படமான 10 தல என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தின் படபிடிப்பு ஆனது கடந்த சில மாதங்களாக சென்னையில் மிக பிரமாண்டமாக நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இவ்வாறு உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் நடிகர் சிம்பு கதாநாயகனாக நடிப்பது மட்டும் இல்லாமல் கௌதம் கார்த்திக் ஆகிய இருவரும் முக்கிய கேரக்டரில் நடித்து வருவதாக தெரியவந்துள்ளது. மேலும் இந்த திரைப்படத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது நாம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

இந்நிலையில் இவர்கள் மட்டுமின்றி மற்றொரு பிரபலமும் இந்த திரைப்படத்தில் இணைந்துள்ளார் அவர் வேறு யாரும் கிடையாது பிரபல நடிகர் கலையரசன் அவர்கள் தான் மேலும் இவர் இந்த திரைப்படத்தில் ஒரு சின்ன கேரக்டரில் நடிப்பது தனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக கலையரசன் சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இவர் இந்த பதிவுடன் நடிகர் சிம்புவுடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படம் தற்பொழுது சமூக வலைதள பக்கத்தில் மிகவும் வைரலாக பரவி வருகிறது மேலும் இந்த திரைப்படத்தை சூர்யா ஜோதிகா நடித்த சில்லுனு ஒரு காதல் என்ற திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் கிருஷ்ணா தான் இயக்குகிறார்.

மேலும் இந்த திரைப்படத்தில் இசையமைப்பாளராக இயக்குனர் ஏ ஆர் ரகுமான் அவர்கள் இசையமைப்பது மட்டுமில்லாமல் இந்த திரைப்படம் இந்த ஆண்டு கடைசியில் வெளியாகும் என பட குழுவினர்கள் தெரிவித்துள்ளார்கள்.

kalayarasan-1
kalayarasan-1