அஜித், விஜய், சூர்யா படங்களில் நடித்த இந்த நடிகருக்காக இப்படி ஒரு நிலைமை.. கண் கலங்கும் ரசிகர்கள்.!

ravi-
ravi-

ஹீரோக்கள் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து சினிமா உலகில் மிகப்பெரிய  இடத்தைப் பிடிகின்றனர் ஆனால் குணச்சித்திர நடிகர்கள் அப்படி கிடையாது என்னதான் பல படங்களில் நடித்தாலும் அவரது மார்க்கெட் உயரவே உயராது. அந்த வகையில் பல வருடங்களாக தமிழ் சினிமாவில் நடித்து ஓடிக் கொண்டிருப்பவர் நடிகர் ரவி. இவர் குழந்தை நட்சத்திரமாகவும், குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார்.

இதுவரை இவர் ஒட்டுமொத்தமாக 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். இவர் அண்மையில் பேட்டி ஒன்றில் சினிமாவில் பட்ட கஷ்டங்களை பகிர்ந்து உள்ளார் அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. நான் ஆறு வயது இருக்கும் பொழுது குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்து விட்டேன் முதலில் மங்கம்மா சபதம் என்ற படத்தில் நடித்தேன். 16 வயது இருக்கும்பொழுது பிரசாந்துடன் வைகாசி பொறந்தாச்சு என்ற படத்தில் நடித்தேன்.

அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமா உலகில்  வில்லன் குணச்சித்திர கதாபாத்திரம் காமெடியன் என பல கதாபாத்திரங்களில் நடித்துள்ளேன் குறிப்பாக அஜித் விஜய் சூர்யா போன்ற நடிகர்களுடன் நடித்து இருக்கிறேன். சினிமாவில் எல்லோருமே அவமானப்பட்டு இருக்கிறார்கள் அதில் நானும் ஒருவன் படத்தின் ஷூட்டிங்கில் மதிய வேலை சாப்பிட வந்தேன். நான் சாப்பிடுவதற்கு முன்பாகவே தட்டில் மீன் வைத்து விட்டார்கள்.

actors
actors

அதை சாப்பிட்டுவிட்டு மீண்டும் ஒரு மீனை எடுத்து சாப்பிட்டேன் அப்பொழுது அங்கு இருந்தவர்கள் என்னை ஒரு மாதிரியாக பார்த்து திட்டினார்கள். எனக்கு ஒரே அசிங்கமாக போனது அதன் பிறகு தட்டை கழுவி வைத்து விட்டு அங்கிருந்து சென்று விட்டேன். சினிமாவில் அஜித் விஜய் சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளேன் அவர்களில் அஜித் ரொம்பவும் நல்லவர் அவருடன் முதலில் வான்மதி படத்தில் நடித்தேன் அதன் பிறகு ரெட், தீனா ஆகிய படங்களில் நடிக்கும் பொழுது அவரை நெருங்க கூட முடியவில்லை..

அவர் நல்லவர்தான் ஆனால் அவர் கூட இருப்பவர்கள் என்னமோ அவரை நான் கடித்து தின்று விடுவது போல பார்ப்பார்கள் இப்பொழுது சினிமா உலகில் எனக்கு மிகப் பெரிய அளவில் பெரிய பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை இருப்பினும் சின்ன படங்களில் நடிக்கிறேன் சின்ன படத்தை ரொம்ப கஷ்டப்பட்டு எடுக்கிறார்கள் அதை எப்படி கொண்டு சேர்ப்பது என்று தெரியவில்லை என கூறினார்.