ஜவான் திரைப்படத்தில் இப்படி ஒரு பிரம்மாண்ட காட்சியா.? தலைவர் இத எங்க சுட்டாருன்னு தெரியலையே.? அட்லியை வெளுத்து விட்ட ரசிகர்கள்…

தமிழ் சினிமாவில் காப்பி அடித்து மாட்டிக்கொண்ட இயக்குனர் என்றால் அது அட்லி அவர்கள் தான் என்னதான் தன்னுடைய படங்களில் காப்பி அடித்து படத்தை எடுத்திருந்தாலும் இவர் இயக்கிய அனைத்து படங்களும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது என்று தான் சொல்ல வேண்டும். அதிலும் இவர் விஜய வைத்து மூன்று படங்களை இயக்கி உள்ளார் இயக்குனர் அட்லீ அவர்கள். இந்த மூன்று படங்களும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இயக்குனர் அட்லியை புரிந்து கொண்ட ரசிகர்கள் அவரை பலர் ட்ரோல் செய்து வந்தனர் இந்த நிலையில் தற்போது தமிழை விட்டு தெலுங்கு பக்கம் திரும்பி விட்டார் இயக்குனர் அட்லி.  தெலுங்கில் முன்னணி நடிகரான ஷாருக்கானை வைத்து தற்போது ஜவான் திரைப்படத்தை இயக்கி வருகிறார் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு 80 சதவீதம் முடிவடைந்துவிட்டது மேலும் இன்னும் 20 சதவீதம் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

தற்போது ஜவான் படத்தின் பட பிடிப்பு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பிரபல ஸ்டுடியோவில் நடந்து வருகிறது. அதே பகுதியில் தான் நடிகர் ரஜினியின் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பும் நடைபெற்று வருகிறது இந்த நிலையில் ரஜினியும் நடிகர் ஷாருக்கானும் சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் ஜவான் படம் குறித்த தகவல் ஒன்று தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. அதாவது ஜவான் படத்தில் 200 பெண் ஸ்டெண்ட் கலைஞர்களுடன் நடிகர் ஷாருக்கான் சண்டையிடும் காட்சி படமாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இந்தப் பெண் ஸ்டண்ட் கலைஞர்கள் மும்பையில் இருந்து சென்னைக்கு வரவழைக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த தகவல் சினிமா வட்டாரங்களில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த திரைப்படத்தில் நடிகர் ஷாருக்கானுக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா அவர்கள் நடித்து வருகிறார் மேலும் தீபிகா படுகோன் அவர்களும் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்த வருகிறார்.

ஜவான் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் இந்த படம் உருவாகி வருகிறது. இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என ஏற்கனவே பட குழு அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment