அடங்காத அர்ச்சனா.. விவாகரத்து வரை சென்றதற்கான காரணம் இது தான்.! இவருக்கு இப்படி ஒரு நோயா

vj-archana
vj-archana

சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் அர்ச்சனா தொகுப்பாளராக பட்டையை கிளப்பி வரும் இவர் தற்பொழுது திரைப்படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். இந்நிலையில் திருமணத்திற்கு பிறகும் பல வருடங்களாக மீடியாவில் இருந்து வரும் அர்ச்சனா பலருடைய ஃபேவரட் விஜே ஆவார்.

அந்த வகையில் 90 காலகட்டத்தில் இருந்து தற்போது வரையிலும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் நிலையில் இதற்கிடையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார். இதன் மூலம் தனது பெயரை டேமேஜ் செய்து கொண்டார். இந்நிகழ்ச்சிருக்கு பிறகு விஜய் டிவியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த இவர் பிறகு மீண்டும் ஜீ தமிழில் பணியாற்ற தொடங்கி இருக்கிறார்.

மேலும் தன்னுடைய மகள் சாராவுடன் இணைந்து மிஸ்டர் மாம் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த நிலையில் தொடர்ந்து இவர்களுக்கு நெகட்டிவ் கமெண்ட் கிடைப்பது வழக்கமாக இருந்து வருகிறது. என்னதான் ரசிகர்கள் இவர்களை கழுவி ஊற்றி விமர்சனம் செய்து வந்தாலும் இதனை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாத அர்ச்சனா மற்றும் அவருடைய மகள் இருவரும் சோசியல் மீடியாவின் மிகவும் ஆக்டிவா இருந்து வருகிறார்கள்.

அர்ச்சனாவின் கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வருவது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான் பொருளாதார ரீதியாக அர்ச்சனா நல்ல நிலைமையில் இருந்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் அர்ச்சனா அவருடைய கணவரை விவாகரத்து செய்யும் நிலைமைக்கு போய்விட்டதாகவும் பிறகு அவருடைய மகள் இந்த பிரச்சனையில் தலையிட்டு பேசி இருவரையும் சமாதானப்படுத்தியதாகவும் கூறியிருந்தார்.

எனவே இதனை கேட்ட ரசிகர்கள் அதிர்ச்சடைந்தனர் தற்பொழுது ஏன் இவ்வாறு அர்ச்சனா விவாகரத்து செய்ய முடிவு எடுத்தார் என்பதற்கான காரணம் வெளியாகி உள்ளது .அதாவது அர்ச்சனா சமீபத்தில் மருத்துவமனையில்‌ அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்டது குறித்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.

அர்ச்சனாவிற்கு மூளையில் இருந்து ஒரு விதமான திரவம் கசிய ஆரம்பித்திருக்கிறது இதனால் தான் கோபம் மற்றும் நெகட்டிவிட்டி அதிகமாகி நான் என்ன செய்கிறேன் என்பதையே சுயநினைவு இல்லாமல் செய்திருக்கிறார். அதற்காகத்தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அர்ச்சனாவிற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருக்கிறது.

தற்பொழுது சிகிச்சையின் மூலம் சரிசெய்யப்பட்டாலும் மீண்டும் எப்பொழுது வேண்டுமானாலும் அந்த திரவம் கசிய ஆரம்பிக்கலாமாம் எனவே இதனால் எப்பொழுதும் என்ன நடக்கும் என்று தெரியாது எனவே அவருடைய குடும்பத்தினர்கள் பயத்தில் இருந்து வருகிறார்களாம். சிகிச்சைக்கு பிறகு கூட அர்ச்சனா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதை குறைத்துக் கொண்டுள்ளார் அர்ச்சனாவிற்கு இப்படி ஒரு வினோதமான நோய் இருப்பது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.