துணிவு திரைப்படத்தின் இடைவெளியில் வாரிசுக்கு விளம்பரமா..? பொங்கி எழுந்த தல அஜித் ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் தற்பொழுது மிகப் பெரிய போட்டியில் இருக்கும் நடிகர் என்றால் அவர் விஜய் மற்றும் அஜித் ஆகிய இருவரும் தான் அந்த வகையில் இவர்கள் இருவருக்குமே பாரபட்சம் இன்றி ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதை நாம் அனைவருக்குமே தெரிந்த விஷயம்.

அந்த வகையில் இவர்களுடைய திரைப்படங்கள் வெளிவந்தாலே போதும் அவை மிகவும் பிரம்மாண்டமாக பண்டிகை போல் ரசிகர்கள் கொண்டாடுவதை நாம் அடிக்கடி கண்டு கொண்டிருக்கிறோம் அந்த வகையில் இரண்டு தரப்பு ரசிகர்களையும் மோதவிடும் அளவிற்கு வெளிவந்த துணிவு மற்றும் வாரிசு திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி இருந்தது.

அந்த வகையில் தல அஜித் நடிப்பில் உருவான துணிவு மற்றும் விஜய் நடிப்பில் உருவான வாரிசு ஆகிய இரண்டு திரைப்படங்களுமே ஒரே நேரத்தில் வெளியானது மட்டும் இல்லாமல் ரசிகர்கள் இதனை திருவிழா போல கொண்டாடி வந்த நிலையில் இந்த இரண்டு திரைப்படத்திற்கு மே நல்ல விமர்சனங்களை மட்டுமே ரசிகர்கள் கொடுத்து வந்தார்கள்.

அந்த வகையில் நேற்று காரைக்குடி திரையரங்கு ஒன்றில் துணிவு திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தது அப்பொழுது இடைவெளி நேரத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவான வாரிசு திரைப்படத்தின் தீ.தளபதி என்ற பாடலை தியேட்டரில் போட்டு இருந்தார்கள் அப்பொழுது அஜித் ரசிகர்கள் விஜய்யின் பாடலை மாற்ற சொல்லி கூச்சலிட்ட சம்பவம் சமூகவலைதள பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் இந்த வீடியோ சமூக வலைதள பக்கத்தில் காட்டு தீர்ப்பு ஒன்று பரவிய நிலையில் தியேட்டர் உரிமையாளர் இவை தெரியாமல் நடந்த தவறு என அதற்கு விளக்கம் கொடுத்து மன்னிப்பு கேட்டு உள்ளார்.

Leave a Comment