நடிகர்களுடன் நடித்த பின்பு அவர்களின் மகன்களுடன் நடித்த மகள் நடிகைகள்.! இதோ முழு லிஸ்ட்

தமிழ் சினிமாவை பொருத்தவரை வாரிசு நடிகர்கள்,நடிகைகள் தற்போதும் ஒன்றாக இணைந்து நடித்து வருகிறார்கள் அந்த வகையில் நாம் இப்பொழுது யார்,யார் என்று பார்க்கப் போகிறோம்.

சிவகுமார்,மேனகா:இவர்கள் 2 பேரும் உறங்காத நினைவுகள் என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்திருப்பார்கள் அந்த திரைப்படம் திரையரங்குகளில் நன்றாக ஓடியது என்று கூட கூறலாம்.

சூர்யா கீர்த்தி,சுரேஷ்: மேக்னாவின் மகள் தான் கீர்த்தி சுரேஷ் இவர் தானா சேர்ந்த கூட்டம் என்ற திரைப்படத்தில் சூர்யா மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவரும் இணைந்து நடித்திருப்பார்கள் இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

keerthi suresh
keerthi suresh

கார்த்திக்,ராதா:இவர்கள் இருவரும் அலைகள் ஓய்வதில்லை என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்து ரசிகர்களிடையே புகழ்பெற்று விளங்கி விட்டார்கள்.

கௌதம் கார்த்திக்,துளசி: ராதாவின் மகள் துளசி இவர் மணிரத்னம் இயக்கிய கடல் படத்தில் இருவரும் இணைந்து நடித்தார்கள் தான் ஆனால் அந்த திரைப்படம் இவர்களுக்கு தோல்வியை தழுவி தந்தது.

k.karthik
k.karthik

முத்துராமன்,தேவிகா நெஞ்சில் ஒரு ஆலயம் திரைப்படம் ரசிகர்களால் தற்போதும் மறக்க முடியாது இந்த திரைப்படம் குறைந்த நாட்களில் எடுக்கப் பட்டாலும் ரசிகர்களிடையே நல்ல விமர்சனத்தை பெற்றிருந்தது.

கார்த்திக்,கனகா பெரிய வீட்டு பண்ணைக்காரன்,எதிர்காற்று,கட்டப்பஞ்சாயத்து போன்ற திரைப்படங்களில் இணைந்து நடித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவாஜி,தேவிகா:சிவாஜியும் தேவிகாவும் ஆண்டவன் கட்டளை திரைப்படத்தில் இணைந்து நடித்திருப்பார்கள். இந்த திரைப்படம் இவர்களுக்கு நல்ல வெற்றியை தந்தது.

பிரபு,கனகா:ஜல்லிக்கட்டு காளை,பெரிய குடும்பம் போன்ற திரைப்படங்களில் இருவரும் நடித்து சுமாரான வெற்றி பெற்று தந்தது.

சிவாஜி லக்ஷ்மி:நெஞ்சமே திரைப்படத்தை தற்போதும் ரசிகர்களால் மறக்க முடியாத அந்த அளவிற்கு சிவாஜி கணேசனின் நடிப்புத்திறனை அவ்வளவு பாராட்டுவார்கள்.

பிரபு,ஐஸ்வர்யா:சுயம்வரம் என்ற திரைப்படத்தில் சிவாஜியின் மகனும் லட்சுமி மகளும் ஐஸ்வர்யாவும் இணைந்து இந்த திரைப்படத்தில் நடித்திருந்தனர் இந்த திரைப்படம் உலக சாதனைக்காக 24 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட திரைப்படமாகும்.இதேபோல் இன்னும் நிறைய வாரிசு நடிகர்கள்,நடிகைகள் ஜோடி போட்டு தற்போது படு பிசியாக நடித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment