தமிழ் சினிமாவில் தொடர் வெற்றிகளை கொடுத்த.! பெண்களின் கனவு கண்ணன் நடிகர் சுதாகர் கோமாளியாக மாறியது எப்படி.!

0
sudhkar
sudhkar

கிழக்கே போகும் ரயில் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகர் சுதாகர் ஆவார். இவரின் முதல் படமே இவருக்கு மிகப்பெரிய வெற்றியைத் தந்தது. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ராதிகா நடித்திருப்பார்.இப்படத்தை முன்னணி இயக்குனரான பாரதிராஜா இயக்கியுள்ளார். அந்தவகையில் ராதிகாவும் சுதாகரும் இணைந்து பல படங்கள் நடித்து வந்தனர். எனவே ராதிகாவும் சுதாகரும் உண்மையான காதலர்கள் என கூறப்பட்டது.

ஆரம்ப காலத்தில் பல படங்கள் நடித்து வெற்றியை அடைந்து வந்தார். திரை வாழ்க்கை நன்றாக போய்க் கொண்டிருந்த நிலையில் இவரை நிறைய ஹீரோயின்கள்  காதலித்து  வருகிறார்கள் என்ற வதந்திகள் வெளிவந்து கொண்டிருந்தது அந்த நிலையில் சுதாகர் இருக்குமிடத்தில் எப்பொழுதும் பெண்கள் கூட்டமும், மதுபானங்களும் இருக்குமாம்.

இந்தவகையில் பட ஷூட்டிங்கின்போது குடித்துவிட்டு படப்பிடிப்புக்கு சென்றார் என்றும் கிசுகிசுக்கப்பட்டது இந்த நிலையில் பெண்களும்,குடியும் உலகமாகவே இருந்த இவருக்கு குறிப்பிட்ட காலகட்டத்தில் படவாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனவே இவர் போட்டி படுக்கைகளை எடுத்துக்கொண்டு ஆந்திரா சென்று விட்டார். அங்கு போயும் படவாய்ப்புகள் தேடி உள்ளார் ஆனால் ஹீரோவாக நடிக்க கிடைக்கவில்லை எனவே சிறிது காலம் கோமாளியாக தன் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்தார்.

இந்த  நிலையில் காமெடியனாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது அப்பொழுது கூட இவருடைய சொகுசான வாழ்க்கை மாறவில்லை என கூறப்படுகிறது. தற்போது இவருக்கு இரண்டு சிறுநீரகங்களிலும் பிரச்சனை உள்ளதாம் ஆனால் அதனை சரி செய்வதற்கு பணம் இல்லை என்பதால் சிகிச்சை அளிக்கும் காலம் தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது.