சச்சின், கோலி வரிசையில் சுப்மன் கில்லா.? குஜராத் டைட்டன்ஸ் அணியின் கோச் பேச்சு.!

ஐபிஎல் போட்டி பலரையும் வளர்த்து விடுகிறது மேலும் திறமையானவர்களே இன்னும் திறமையானவர்களாக மாற்றுகிறது அப்படி இந்த ஆண்டு ஐபிஎல் சீசன் பலருக்கும் நல்ல ஆண்டாக அமைந்துள்ளது. அதிலும் குறிப்பாக இளம் வீரர் சுப்மன் கில் அவர்களுக்கு நல்ல ஆண்டாக அமைந்துள்ளது. இந்த ஐபிஎல் சீசன்னில் மட்டும்  800 ரன்கள் அடித்துள்ளார் அதில் மூன்று சதங்கள் உள்ளடங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கவனே இரட்டை சாதம் மற்றும் பல சதங்கள் அடித்து அசத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது தொடர்ந்து நல்ல பார்மில் இருக்கும் சுப்மன் கில்லை பலரும் பாராட்டி வருவதோடு மட்டுமல்லாமல்  சச்சின், விராட் கோலி வரிசையில் பலரும் சேர்த்து வைத்து பேசுகின்றனர் ஆனால்  கிரிக்கெட் வல்லுனர்கள்   பலர்கள் அதற்குள்ளையே  சச்சின் போன்ற வீரர்களுடன் ஒப்பிட்டு பேசுவது சரி இல்லை என பலரும் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில்  ஐபிஎல் தொடரில் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் பயிற்சியாளர் கேரி கிரிஸ்டன்   பேசியது.. சுப்மன் கில் ஒரு இளம் வீரர் உலகின் தலைசிறந்த வீரராக இருக்க வேண்டும் என்று நம்ப முடியாத வகையில் திறமையும் நம்பிக்கையும் கொண்டிருப்பவர் அவரது பயணத்தின் ஆரம்பத்தில் சச்சின் மற்றும் விராட் கோலி உடன் ஒப்பிடுவது நியாயமற்றது. அவர் முழுவதுமாக மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் இந்திய அணிக்காக வெற்றியை பெற்று தரும் தரமான வீரராக இருப்பார் என்று நான் நம்புகிறேன் தற்காலத்தில் குறிப்பாக 20 ஓவர் கிரிக்கெட் மிக வேகமாக வளர்ந்து வருகிறது.

அவர் உலகில் உள்ள சில திறமையான வீரர்களில் ஒருவர் அவர் மூன்று வடிவிலும் சமமாக திறன் பட செயல்பட முடியும் என்று நிரூபித்துள்ளார். உலகின் சிறந்த பந்துவீச்சை சமாளிக்கும் நுட்பம் கொண்டவர் அவர் சமமாக நன்றாக விளையாடுகிறார் ரன் தேவைப்படும் பொழுது முன் மற்றும் பின் கால்களில் அவரால் ரன் கொண்டு வர முடியும் அனைத்து வடிவங்களிலும் சிறந்த வீரராக மாறுவதற்கு அவரிடம் திறமைகள் இருக்கிறது.

இவரும் மற்ற வீரர்கள் போலவே சவால்களையும், தடைகளையும் சந்திப்பார் அவர் அதை எப்படி கையாளுகிறார் தொடர்ந்து எப்படி முன்னேறுகிறார் என்று பார்க்க வேண்டும் இதுவே அவரது நீண்ட கால வெற்றியை உறுதி செய்யும் எனக் கூறியுள்ளார்.  மேலும் பேசிய அவர் கில் தலைவர் ஆகுவதற்கான தகுதிகள் இருப்பதாக நான் பார்க்கிறேன். அவருக்கு விளையாட்டு பற்றிய நல்ல புரிதலும், அறிவும் இருக்கிறது என கூறினார்.

Leave a Comment