பேனர் விழுந்து மாணவி உயிரிழப்பு வெளியானது ஷாக்கிங் சிசிடிவி வீடியோ காட்சி.

0
subasri
subasri

சமீபகாலமாக பொதுக்கூட்டம் மற்றும் அரசியல் கட்சி கூட்டம், திருமண விழா காது குத்து என அனைத்திற்கும் பேனர்கள் வைத்து கொண்டாடுகிறார்கள், அதுவும் சென்னையில் திருமண விழா என்றாலே சாலைகளில் செல்ல முடியாத அளவிற்கு பேனர்களை வைத்து அமர்க்களப் படுத்துவார்கள், ஆனால் இந்த பேனர் பரிதாபமாக ஒரு இளம்பெண் உயிரை எடுத்துள்ளது.

சுபஸ்ரீ என்ற இளம்பெண் பேனர் விழுந்ததால் உயிரிழந்துள்ளார் இந்த கோர சம்பவம் தமிழக மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, சென்னையிலுள்ள குரோம்பேட்டையில் பவானி நகர் பகுதியை சேர்ந்தவர் சுபஸ்ரீ. இவர் பெருங்குடியில் உள்ள ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார் அவர் தினமும் தனது கம்பெனிக்கு ஸ்கூட்டியில் தான் செல்வார்.

அப்படி வழக்கம்போல் வேலைக்கு சென்று முடித்துவிட்டு மதியம் தனது இருசக்கர வாகனத்தின் மூலம் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார், அப்பொழுது பள்ளிக்கரணை வழியாக பல்லாவரம் சாலையில் சென்றுகொண்டிருந்த போது காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளரும் பள்ளிக்கரணையில் முன்னாள் நகரமன்ற உறுப்பினருமான ஜெயகோபால் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சிகள் குறித்து பேனல்கள் கட்சி கொடிகள் வைக்கப்பட்டிருந்தன.

இந்த பேனர்கள் அனைத்தும் சாலை வழியே செல்லும் வழியில் வைக்கப்பட்டிருந்தார்கள் இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது, இந்த நிலையில் சுபஸ்ரி அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருக்கும் பொழுது அவர்கள் வைத்திருந்த பேனர் ஒன்று சரிந்து அவர் மீது விழுந்தது இதனால் நிலை தடுமாறி வண்டியிலிருந்து கீழே விழுந்தார் இதை கவனிக்காமல் வந்த தண்ணீர் லாரி அவர் மீது ஏறி விட்டது. இதனால் பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

அந்த லாரி ஓட்டுனரை உடனடியாக கைது செய்தார்கள், சுபஸ்ரீ அவர்கள் பெற்றோருக்கு ஒரே மகள் ஆவார் இந்த கோர சம்பவம் தமிழகத்தை உலுக்கி உள்ளது, பேனர்கள் வைத்த அரசியல் கட்சி காரர்களை கைதுசெய்யவில்லை அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை, சில நாட்களுக்கு முன்பு சென்னையில் பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் பேனர் வைக்கப்பட்டால் கடுமையாக தண்டனை வழங்கப்படும் என உச்சநீதிமன்றம் விதிகளை அமல்படுத்தியது ஆனால் அதையும் மீறி இதுபோல் செயல் நடைபெற்று வருகிறது.

அரசியல்வாதிகளின் செல்வாகாலும்  காவல்துறையின் கவனக்குறைவாலும் இந்த இளம்பெண் சுபஸ்ரீ உயிர் அநியாயமாகப் போய்விட்டது டிஎம்கே தலைவர் மு க ஸ்டாலின் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் ஏராளமான கண்டனங்கள் வந்து கொண்டே இருக்கின்றன இந்த பேனர் வைத்த ஆள்களை உடனடியாக கைது செய்து அவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என கூறி வருகிறார்கள்.

இந்த நிலையில் அதன் சிசிடிவி காட்சி வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.