திரைப்பட இயகுனராக களம் இறங்கும் ஸ்டுண்ட் சில்வா : முதல் படத்திலேயே டாப் இரண்டு நடிகைகளை கமீட் செய்ய உள்ளாராம்.? யார் யார் தெரியுமா.?

சினிமாவில் ஒரு படம் வெற்றியை கொடுக்க முக்கிய பங்கு வகிப்பது ஸ்டண்ட் காட்சிகள் ரசிகர்கள் ஒரு படத்தில் எத்தனை ஸ்டண்ட் காட்சிகள் இருக்கிறது அதை எண்ணி தான் படத்திற்கு போகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

அதுவும் டாப் நடிகர்களின் படங்கள் என்றால் எந்த ஸ்டண்ட் இயக்குனர் எத்தனை காட்சிகளை வைத்திருக்கிறார் என்பது தான் முதலில் நோக்குவார்கள் அந்தவகையில் தமிழையும் தாண்டி பல்வேறு சினிமா மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் ஸ்டண்ட் சீன்களை அதிரடியாக எடுத்துக் கொடுத்து வலம் வந்தவர் தான் மாஸ்டர் சில்வா.

இவர் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் ரஜினி, அஜித், விஜய் போன்ற படங்களில் கட்டாயமாக இருப்பார் ஏனென்றால் அவரது சீன்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமாகவும் அதே சமயம் அதிகமாகவும் இருப்பதால் அவர் தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நபராக இருந்து வருகிறார்.

இப்பொழுது இவர் சினிமா உலகில் இயக்குனராக அடியெடுத்து வைத்துள்ளார் இவர் இயக்கும் முதல் படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடிக்கின்றனர் அவர்களில் ஒருவர் “சாய்பல்லவி” என்பது குறிப்பிடத்தக்கது இன்னொருவர் தமிழ் சினிமாவில் பத்து வருடங்களுக்கு முன்பு நடித்த நடிகையான “ரீமா கல்லிங்கல்” என்பவர் நடிக்க உள்ளார்.

மாஸ்டர் சில்வாவின் முதல் படமென்பதால் படத்திற்கான எதிர்பார்ப்பு தற்பொழுது தாறுமாறாக எகிறி உள்ளது மேலும் இந்த படத்தில் வேறு யார் நடிப்பவர்கள் என்பதை மிக விரைவில் தகவல்கள் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் விரைவில் இந்த திரைப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட உள்ளது.

Leave a Comment