வலிமை படத்திலிருந்து வெளியான ஸ்டன்ட் காட்சிகள் – தல ரசிகர்கள் கொண்டாட்டம்

சும்மாவே அஜித்தின் திரைப்படங்கள் ஒவ்வொன்றுக்கும் ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருப்பது வழக்கம் அதுவும் சிறப்பான இயக்குனர்கள் அமைந்துவிட்டால் அந்த படத்தை கோலாகலமாக கொண்டாடுவதோடு மட்டுமல்லாமல் மிகப்பெரிய அளவில் சம்பவம் செய்வார்கள் அந்த வகையில் தீரன் அதிகாரம் ஒன்று, சதுரங்க வேட்டை சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து மக்களின் கவனத்தை ஈர்த்த இயக்குனர் ஹச். வினோத்துடன் அஜித் இரண்டாவது  இணைந்து வலிமை படத்தில் நடித்துள்ளார்.

இதனால் படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது விண்ணைத் தொட்டுள்ளது என்றுதான் கூறவேண்டும் இந்த படத்தின் சூட்டிங் ஆரம்பிக்கும் போது கூட வலிமை படத்திற்கான அப்டேட் ரசிகர்கள் எங்கிருந்தெல்லாம் கேட்டுப் பார்த்தார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். தற்போது அஜீத் மற்றும் ஹச். வினோத்தின் காம்பினேஷன் மக்களை வெகுவாக கவர்ந்து இழுத்து இருக்கிறது.

வலிமை படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாக இருந்தாலும் அதற்கு முன்பாக வலிமை படத்திலிருந்து அப்டேட் மற்றும் வீடியோ போன்றவற்றை வெளியிட்ட வந்தனர். போத்தா குறைக்கு படக்குழுவை சேர்ந்த பிரபலங்கள் வலிமை படத்தை பற்றி சொல்லி வருகின்றனர். சமீபத்தில் கூட வில்லன் கார்த்திகேயா இந்திய அளவில் இது போன்ற ஒரு ஆக்ஷன் படம் இருக்கவே முடியாது.

அந்த அளவுக்கு நிறைய ஆக்சன் சீன்கள் இருப்பதாக அவர் தெரிவித்தார் மேலும் திலீப் சுப்பராயன் இந்த படத்தின் காட்சிகள் ஒவ்வொன்றும் ரசிகர்களை கொண்டாடுவதையும் தாண்டி அமைதியாக்கி விடும் அந்த அளவிற்கு இருக்கும் என சொல்லி உள்ளார் இதனால் தற்போது தல ரசிகர்கள் செம உற்சாகத்தில் இருப்பதோடு படத்தை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த திரைப்படத்தை மிக பிரம்மாண்ட பொருட்செலவில் ஹச். வினோத் எடுத்து உள்ளதால் வலிமை படத்தை தமிழை தாண்டி ஹிந்தி மற்றும் தெலுங்கில்  வெளியீட்ட முடிவு செய்துள்ளது அடுத்த வருடம் பொங்கலுக்கு தமிழ் தெலுங்கு ஹிந்தி ஆகிய மொழிகளில் வலிமை படம் வெளியாக இருக்கிறது அதற்கான வேலையை படக்குழு செய்து வருகிறது. இந்த நிலையில் வலிமை படத்திலிருந்து சில புகைப்படங்கள்  வெளியாகியுள்ளன இதோ நீங்களே பாருங்கள்.

Leave a Comment