90 காலகட்டங்களில் ஸ்டண்ட் மாஸ்டர் ஆகவும், திரையுலக எழுத்தாளர், நடிகர் என பன்முகத் தன்மை கொண்டவராக வலம் வந்தவர் கனல் கண்ணன். ஆரம்பத்தில் ஸ்டண்ட் மாஸ்டராக பல்வேறு படங்களில் பணியாற்றி தனது திறமையைக் காட்டினார் அதன் பின்பு இவருக்கு சினிமா உலகில் ஏறுமுகமாகவே தான் இருந்தது. ஒரு கட்டத்தில் தென்னிந்திய திரை உலகில் அசைக்க முடியாத சக்தியாக உருமாறி ஆரம்பபித்தார்.
அதனால் டாப் ஹீரோக்களின் படங்களில் பணியாற்ற தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்தது அந்த வகையில் தமிழில் ரஜினி, விஜய், அஜித் போன்ற ஹீரோக்களுடன் முக்கிய படங்களில் பணியாற்றி வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.
தற்பொழுது கூட இவர் விக்ரமின் கோப்ரா திரைப்படத்தில் பணியாற்றி வருகிறார் இந்த நிலையில் கனல் கண்ணன் அஜித் விஜய் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை சமூகத்தில் பகிர்ந்து கொண்டார்.
அஜித்துக்கு முதுகில் எலும்பு இல்லை.. மக்கள் நினைப்பது போல ஹீரோ ஆவது அவ்வளவு சாதாரண விஷயம் அல்ல அர்ப்பணிப்பும் கடின உழைப்பும் இருந்தால் மட்டுமே ஹீரோவாக முடியும் எனவும் கூறினார் விஜயை பற்றி கூறுகையில் சூட்டிங்கின்போது கண்ணாடி உடைக்கும் காட்சிகளில் விஜய் தலையில் அடிப்பட்டு அதிகமாக ரத்தம் கொட்டியது.

இப்படி தீவிர அர்ப்பணிப்பு இருந்ததால்தான் அவர்கள் உச்ச நட்சத்திரமாக தற்போதும் இருக்கிறார்கள் என கூறினார்.