ரயில்வே பணியிடங்களில் 90 சதவீத வேலைவாய்ப்பை தமிழர்களுக்கு வழங்க வேண்டுமென திருச்சி பொன்மலையில் போராட்டம்!!

0

தமிழர்கள் மத்திய அரசின் மீதும் தமிழ்நாடு அரசின் மீதும் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். அதாவது தமிழகத்தில் ரெயில்வே பணியிடங்களில் 90% தமிழர்களே இருக்க வேண்டும் என்ற போராட்டத்தை கையிலெடுத்து திருச்சியில் உள்ள பொன்மலை பணிமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.

அதாவது பொதுவாக தமிழ்நாட்டில் ரயில்வே  துறையில் 90% வேலைவாய்ப்புகளை தமிழ் இளைஞர்களுக்கு தரவேண்டும் என்றும் வெளிமாநிலத்தில் இருந்து இங்கு வந்து யாரையும் பணிபுரிய விடமாட்டோம் என்றும் வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு வீடு வாடகைக்கு தரமாட்டோம், 10 சதவீதம் அதிகமாக வெளிமாநிலத்தவர் பணியில் அமர்த்தி உள்ள தமிழ் கடைகளில் பொருட்கள் வாங்க மாட்டோம், அதுவும் முக்கியமாக வெளி மாநிலத்தவர்களின் நிறுவனங்களில் பொருட்கள் வாங்க மாட்டோம் என்று ஐந்து கோரிக்கைகளை முக்கியமாக வைத்துள்ளார்கள்.

ஆனால் தற்போது உள்ள ரயில்வே பணியில் அதிகமானோர் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் தான் இருக்கிறார்கள். இதனை உறுதிபடுத்தும் வகையில் சில நாட்களுக்கு முன்பு வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் அதிகப்படியானோர் திருச்சியில் உள்ள பொன்மலை பணியமைப்பில் சான்றிதழ் சரி பார்க்க வந்து சென்றிருக்கிறார்கள்.

இவர்கள் போராட்டத்தை நடத்தப் போகிறார்கள் என்பதை அறிந்த காவல்துறையினர் முன்னெச்சரிக்கையாக பணிமனை வளாகத்தின் வாயில் கதவை மூடிவிட்டு சில தடுப்பு இரும்புக் கம்பிகளையும் வைத்து காவலுக்கு இருந்திருக்கிறார்கள். எனவே உள்ளே செல்ல முடியாத போராட்டக்காரர்கள் பணிமனை வளாகத்தின்  வாயில் முன்பு அமர்ந்து போராடி வருகிறார்கள்.

இந்த போராட்டத்தில் இளைஞர்கள், விவசாயிகள், கட்சிக்காரர்கள் என பலர் கலந்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது,