வலிமை திரைப்படம் ரிலீஸ் தேதி குறித்து வெளியான அட்டகாசமான தகவல்.!

தமிழ் சினிமா உலகில் என்றும் தல என்ற பட்டத்தோடு வலம் வருபவர் அஜித்குமார் இவரது நடிப்பில் வெளியான வேதாளம்,விஸ்வாசம்,நேர்கொண்டபார்வை,வீரம்,தீனா, அமர்க்களம்,அட்டகாசம்,வரலாறு,ரெட் போன்ற பல திரைப்படங்கல் இவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் பல கோடி வசூல் செய்து சாதனை படைத்திருக்கும் என்பது பலருக்கும் தெரிந்ததுதான்.

மேலும் தல அஜித் நடிப்பில் தற்போது மிக விறுவிறுப்பாக உருவாகி வரும் திரைப்படம் தான் வலிமை இந்த திரைப்படத்தை இயக்குனர் எச்.வினோத் இயக்கி அனுபவம் மிக்க தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் இந்தத் திரைப்படத்திற்காக யுவன் சங்கர் ராஜா இசையமைத்து அஜித்திற்கு ஜோடியாக ஹீமா குரோஷி நடித்துள்ளார் அஜித்திற்கு வில்லனாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் கார்த்திகேயா நடித்திருக்கிறார்.

ajith

இந்நிலையில் வலிமை படத்தை பற்றி ஒரு தகவல் இணையதளத்தில் வைரலாகி வருகிறது அந்த தகவல் என்னவென்றால் வலிமை திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வைரலாகி வருகிறது இதற்கு இடையே வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் வருகிற மே 1ம் தேதி தல அஜித் பிறந்த நாளன்று முன்னிட்டு ரிலீஸ் தேதியுடன் வெளிவரும் என தகவல் வைரலாகி வருகிறது.

மேலும் இந்த தகவலை அறிந்த ரசிகர்களிடையே நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு அதிகமாகி கொண்டே வருகிறது என்றுதான் கூறவேண்டும்.

Leave a Comment

Exit mobile version