“வலிமை” படத்தின் வெளிநாட்டு உரிமையை கடும் போட்டிக்கு இடையே கைப்பற்றிய மிகப்பெரிய நிறுவனம்.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகனாக வலம் வருபவர் அஜித் சினிமாவையும் தாண்டி இவரது நடத்தை மற்றும் விடாமுயற்சி ஆகியவை ரசிகர்களுக்கு பிடித்துப் போனதால் ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகின்றனர் அவர்களுக்காக தான் நடிக்கும் படங்களில் ரிஸ்க் எடுத்து நடித்து வருகிறார்.

அப்படி சமீப காலமாக அஜித் நடித்த திரைப்படங்கள் ஒவ்வொன்றும் பிளாக்பஸ்டர் படங்களாக இருந்து வந்துள்ளன. நீண்ட இடைவெளிக்கு பிறகு அஜித் வலிமை திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் ஆம் இந்த படத்தின் சூட்டிங் இரண்டு வருடங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டு இருந்தாலும் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து இப்போதுதான் முழுமை பெற்றது.

இதனை அடுத்து அடுத்த வருடம் பொங்கலுக்கு படம் வெளியாக இருக்கிறது. படம் வெளிவருவதற்கு முன்பாகவே தமிழ்நாட்டு ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வகையில் வலிமை படத்திலிருந்து தொடர்ந்து அப்டேட்களை கொடுத்து வருகிறது படக்குழு அப்படி ப்ரஸ்ட் போஸ்டர் தொடங்கி கடைசியாக வலிமை படத்தின் மேக்கிங் வீடியோ வரை அனைத்துமே வேற லெவல் புதிய சாதனைகளையும் படைத்து வருகிறது.

இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் பிசினஸிலும் நல்லாவே வருகிறதாம் தமிழ் பக்கம் வினியோகம் சிறப்பாக நடைபெற்றுவருகிறது. தற்பொழுது வெளிநாட்டு உரிமம் விநியோகமும் சிறப்பாக போய்க் கொண்டிருக்கிறதாம். அதிலும் குறிப்பாக தமிழ் படங்கள் மத்திய கிழக்கு நாடுகளை தவிர்த்து பார்த்தால் தமிழ் படங்கள் அதிகம் வசூல் செய்வது வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் தான்.

வலிமை படம் அங்கும் நல்லதொரு வரவேற்பை பெறும் என்பதால் தற்போது வலிமை படத்தின் விநியோக  உரிமையை வாங்க பல நிறுவனங்கள் போட்டி போட்டு உள்ளன கடும் இழுபறி நடுவே ஹம்சினி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் ஒருவழியாக வாங்கியே சாதித்தது. இந்த நிறுவனமே பிரான்ஸ் நாட்டிலும் விநியோக உரிமையையும் கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment