விஸ்வாசம் திரைப்படத்தின் வசூலை வெறும் 4 நாட்களில் அடித்து நொறுக்கிய “வலிமை”.? ஆச்சரியத்தில் தமிழ் சினிமா.

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் அஜித். அவரது திரைப்படம் ஒவ்வொன்றும் திரையரங்கில் வெளிவரும் பொழுது அதை கோலாகலமாக கொண்டாடி அசத்துகின்றனர் ரசிகர்கள்  படம் சிறப்பாக இருக்கோ இல்லையோ அதே திரையரங்கில் பார்ப்பதற்காக ரசிகர்கள் ஆரம்பத்தில் இரண்டு மூன்று நாட்கள் திரையரங்கை முற்றுகையிட்டு கொண்டாடுவது வழக்கம்.

படம் சிறப்பாக அமையும் பட்சத்தில் அடுத்தடுத்த நாட்களும் அதே வேலைதான் அந்த வகையில் வலிமை திரைப்படம் பல்வேறு தடைகளைத் தாண்டி ஒருவழியாக பிப்ரவரி 14ஆம் தேதி கோலாகலமாக வெளியாகியது மக்கள் மற்றும் ரசிகர்கள் எதிர்பார்த்தது போல லேட்டாக வந்தாலும் செம ட்ரீட் அமைந்துள்ளது அந்த அளவிற்கு ஆக்சன், சென்டிமெண்ட் என அனைத்தும் சிறப்பாக இருப்பதால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து இழுத்துள்ளது.

இதனால் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் அடுக்கிக் கொண்டே போகிறது சொல்லப்போனால் சனி, ஞாயிறு ஆகிய தேதிகளில் தான் கூட்டம் அலைமோதும் ஆனால் செவ்வாய் புதன் ஆகிய தேதிகளிலும் மக்கள் மற்றும் ரசிகர்கள்  திரையரங்கை நாடுவதால் நல்ல லாபம் பார்த்து வருகிறது.

இதனால் விநியோகஸ்தர்களும் திரையரங்கு உரிமையாளர்களும் சந்தோஷத்தில் இருக்கின்றனர் மேலும் வலிமை படக்குழுவும் உற்சாகத்தில் இருக்கிறது ஏனென்றால் நாளுக்கு நாள் வசூல் அதிகரித்த வண்ணமே இருக்கிறது ஒரு வாரம் கூட ஆகவில்லை அதற்குள் 100 கோடி தமிழகத்தில் மட்டுமே  அள்ளி உள்ளது. பல்வேறு தடைகளை உடைத்தெறிந்த முன்னேறிக் கொண்டே போகிறது சொல்லப்போனால் அஜித்தின் விசுவாசம் திரைப்படத்தின் சாதனையை வலிமை படம் எடுத்து உள்ளது.

அஜித்தின் விசுவாசம் திரைப்படம் 7 நாட்களில் மட்டுமே சுமார் 175 கோடி வசூல் செய்த நிலையில் வலிமை படம் வெறும் நான்கு நாட்களில் மட்டுமே சுமார் 180 கோடியை அள்ளிய புதிய சாதனை படைத்துள்ளது இதனால் தற்போது அஜீத்தின் ரசிகர்கள் மற்றும் படக்குழு உற்சாகத்தில் இருக்கிறதாம்.

Leave a Comment