வலிமை படத்தின் டிரைலர் ரெடி.? எப்பொழுது வெளியிட போறாங்க தெரியுமா.? காத்துக்கிடக்கும் தல ரசிகர்கள்.

தமிழ் சினிமாவில் தொடர் ஹிட் படங்களை கொடுத்து வரும் அஜீத் இந்த முறையும் ஒரு நல்லதொரு ஹிட் படத்தைக் கொடுக்க இரண்டாவது முறையாக ஹச்.  வினோத்துடன் கைக்கோர்த்து வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து உள்ளார் இயக்குனர் வினோத் இந்த படத்தை எடுக்க அதிக அவகாசம் அஜித் கொடுத்ததால் மிக நிதானமாக கையாண்டு படத்தை வேறு ஒரு லெவலில் எடுத்துள்ளார்.

இதற்காக அவர் இரண்டு வருடங்கள் கிட்டத்தட்ட எடுத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. படம் தற்பொழுது ரெடியாகி விட்டது. நிச்சயம் இந்த திரைப்படம் அஜித் கேரியரில் ஒரு மிகப்பெரிய ஒரு பிளாக்பஸ்டர் படமாக இருக்கும் என இப்போதே கணிக்கப்பட்டுள்ளது.

அந்த அளவிற்கு இந்த படத்தில் நிறைய விஷயங்களை கொடுத்திருப்பதாக வினோத் நிறைய பேட்டிகளில் கொடுத்து வருகிறார். போதாக்கறைக்கு இந்த படத்தில் நடிக்கின்ற பிரபலங்கள் மற்றும் ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் போன்றவர்களும் வலிமை படத்தை பற்றி பேசிய வண்ணமே இருப்பதால் தல ரசிகர்கள் செம உற்சாகத்தில் இருக்கின்றனர்.

இன்னும் அவர்களை குஷிப்படுத்த அடுத்தடுத்து அப்டேட்கள் வெளியாகின்றன. இதுவரை “நாங்க வேற மாதிரி” பாடல், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், glimpse வீடியோ ஆகியவற்றை கண்டுகளித்த நிலையில் அடுத்ததாக வலிமை படத்தின் ட்ரைலரை எதிர்நோக்கி இருக்கின்றனர். வலிமை படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது.

அதற்கு முன் பார் ரசிகர்கள் ட்ரெய்லரை தான் குறி வைத்துள்ளதால் தற்போது படக்குழு மும்முரமாக வேலை செய்து வருகிறது இந்த படத்தின் டிரைலர் 2 நிமிடம் என கூறப்பட்டு வருகிறது. படத்தின் முக்கிய காட்சிகளை டிரைவராக காட்ட பல சீன்களை கட் செய்து தயாராகி விட்டதாம் வெகுவிரைவிலேயே தேதியுடன் அறிவிக்கப்பட குழு முனைப்பு காட்டி வருவதாக தெரியவந்துள்ளது.

Leave a Comment