வலிமை படம் பொங்கலுக்கு ரீலிஸ்.! 7 வருடங்கள் கழித்து மீண்டும் விஜய் உடன் மோத ரெடியாகும் அஜித்.! ஜெயிக்க போவது யாரு.?

0

சினிமாவில் பயணிக்கின்ற பெரும்பலான நடிகர்கள் நம்பர் 1 இடத்தில் இருக்க வேண்டும் என்ற ஒரு கனவை மையமாக வைத்துதான் ஓடுகின்றனர் அந்த வகையில் ரஜினி, கமல் ஆகியவர்கள் 40 ஆண்டுகளாக போட்டி போட்டுக் கொண்டு வந்த நிலையில் அவர்களை தொடர்ந்து தற்போது அஜித், விஜய் இருவரும் நம்பர் ஒன் இடத்தை நோக்கி ஓடுகின்றனர்.

அதனால் தொடர்ந்து வருடத்திற்கு ஒரு படத்தை கொடுத்தாலும் நல்ல முறையில் கொடுப்பதால் மிகப்பெரிய ஒரு போட்டியாக பார்க்கபடுகிறது. அஜித் தற்போது சிறந்த இயக்குனர் என்ற அந்தஸ்தை தன்வசப்படுத்தி இருக்கும் ஹச். வினோத்துடன் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்து வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

சும்மாவே அஜீத் படத்தை பார்க்க ஒரு மிகப் பெரிய கூட்டம் வரும் ஹச். வினோத், யுவன் ஷங்கர் ராஜா, போனிகபூர் போன்ற மாபெரும் நட்சத்திர பட்டாளமே இணைந்து உள்ளதால் இந்த படத்திற்கான வரவேற்பு தற்போது உச்சத்தில் இருக்கின்றது.

வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், மோஷன் போஸ்டர் மற்றும் முதல் பாடல் ஆகியவை வெளிவந்து ரசிகர்களை கொண்டாட வைத்தது தொடர்ந்து டீசரை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். தற்போதைய நிலவரப்படி இன்று டீசர் வர அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

வலிமை திரைப்படம் முதலில் தீபாவளியை குறி வைத்து வெளியிட இருந்தது ஆனால் அதிலிருந்து தற்போது பின்வாங்கி அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாக இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விஜய்யின் பீஸ்ட் திரைப்படமும் அடுத்த வருடம் பொங்கலை குறி வைத்துள்ளது.

அதற்காக தற்போது படக்குழு மிக தீவிரமாக படத்தை எடுத்து வருகிறது. அஜித்தும், விஜய்யும் இதுவரை பல தடவை போதிலும் அதில் பெரும்பாலும் விஜய்யே ஜெயித்திருக்கிறார். ஏழு வருடங்கள் கழித்து மீண்டும் விஜய்-அஜித் திரைப்படங்கள் நேரடியாக மோத உள்ளன இதில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை தற்போது இருந்தே ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.