சென்னையில் மட்டும் 11 நாளில் “வலிமை” திரைப்படம் – அள்ளிய வசூல் எவ்வளவு தெரியுமா.?

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வரும் நடிகர் அஜித். மக்கள் மற்றும் அவரது ரசிகர்களுக்காக தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். அந்த வகையில் நடிகர் அஜித்தின் நேர்கொண்ட பார்வை, விவேகம், வேதாளம், விஸ்வாசம் போன்ற சூப்பர் ஹிட் படங்களைத் தொடர்ந்து தற்போது வலிமை என்ற படத்தை கொடுத்துள்ளார்.

இந்த படத்தில் அஜித்தின் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் ஹெச் வினோத் இயக்கியுள்ளார். மேலும் இதனை பிரம்மாண்ட பொருட்செலவில் போனி கபூர் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அஜித்தின் வலிமை திரைப்படத்தை ரசிகர்கள் பலரும் பெருமளவு எதிர் பார்த்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களாக இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போய்க் கொண்டே இருந்த..

நிலையில் ஒருவழியாக பிப்ரவரி 24 ஆம் தேதி அன்று ரிலீஸ்ஸானது வலிமை அதுவும் குறிப்பாக தமிழை தாண்டி முதல் முறையாக அஜித்தின் திரைப்படம் தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது இதனால் மிகப்பெரிய வசூலை அள்ளும் என படக்குழு கணக்குப் போட்டது அதற்கு ஏற்றார் போல..

தற்பொழுது படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பட்டையை கிளப்பி வருவதால் நாளுக்கு நாள் வசூல் உயர்ந்த வண்ணமே இருக்கிறது. அதே சமயம் திரையரங்கை மக்கள் கூட்டம் நிரம்பி வருவதால் நாளுக்கு நாள் வசூல் அதிகரித்த வண்ணமே இருக்கிறது.

வலிமை திரைப்படம் மூன்று நாட்களிலேயே 100 கோடியை தொட்ட நிலையில்  உலகம் முழுவதும் சுமார் 200 கோடியை அள்ளி உள்ளதாக கூறப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் ஒரு சூப்பர் தகவலும் கிடைத்துள்ளது அதாவது வலிமை திரைப்படம் பதினோரு நாளில் சென்னையில் மட்டுமே சுமார் 8.5  கோடி வசூல் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Comment

Exit mobile version