“வலிமை” படக்குழு எதிர்பார்த்த முக்கிய இரண்டு இடத்தில் வசூலில் பின்தங்கிய வலிமை.? எங்கு தெரியுமா.?

சினிமாவுலகில் அஜித்தின் திரைப்படங்கள் வெளிவரும் போது ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி தீர்ப்பது வழக்கம் அந்த வகையில் பல்வேறு தடைகளைத் தாண்டி இரண்டு வருடங்களுக்கு மேல் கழித்து ஒரு வழியாக இந்த ஆண்டு பிப்ரவரி 24 ஆம் தேதி திரையரங்கில் கோலாகலமாக வெளியான திரைப்படம் தான் வலிமை.

படம் முழுக்க முழுக்க ஆக்சன், சென்டிமெண்ட், திரில்லர் என அனைத்தும் இருப்பதால் ரசிகர்களுக்கும், மக்களும் இந்தப் படத்தைக் கொண்டாட ஆரம்பித்தனர் வலிமை திரைப்படம் தமிழில் மற்ற மொழிகளான கன்னடம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாகி வெற்றி நடை கண்டு வருகிறது மேலும் எதிர்பார்க்காத ஒரு வசூல் வேட்டையை நடத்தி வருகிறது.

இதனால் திரையரங்கு உரிமையாளர்களும், விநியோகஸ்தர்களும் சந்தோஷத்தில் இருக்கின்றனர். அஜித்தின் திரைப்படங்கள் பெரிதும் ரசிகர்களை கவர்ந்து இழுக்கும் ஆனால் சமீபகாலமாக சென்டிமென்ட் அதிகம் வைத்து நடிப்பதால்  அதிகம் பொதுமக்களும் அஜித்தின் படத்தை பார்க்க தற்போது அலை மோதுகின்றன.

அந்த வகையில் வலிமை படத்தை பார்க்க தற்போது பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதுவரை வலிமை திரைப்படம் சுமார் 160 கோடிக்கு மேல் வசூலித்து சிறப்பாக போய்க் கொண்டிருக்கிறது தமிழ்நாட்டில் பல்வேறு நடிகர்களை வசூலை முறியடித்து புதிய சாதனையும் படைத்துள்ளது.

இப்படி வலிமை படம் பல்வேறு சாதனைகளை செய்தாலும் ஒரு சில முக்கிய இடங்களில் வசூல் அல்ல முடியாமல் மரண அடியையும் வாங்கியுள்ளது. வலிமை திரைப்படம் மலேசியா, சிங்கப்பூர் ஆகிய இடங்களில் வசூல் வேட்டை கண்டு வருகிறது ஆனால் UK மற்றும் அமெரிக்காவில் வசூலில் பின்தங்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

Leave a Comment

Exit mobile version