வலிமை தான் அடுத்த மங்காத்தா.! உண்மையை உடைத்த ஹச். வினோத்

தமிழ்சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் அஜித். தற்பொழுது இவர் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் யுவன் ஷங்கர் இசையில் உருவாகி வரும் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார் இப்படத்தை  நேர் கொண்ட பார்வை படத்தை இயக்கிய நிரோஷா அவர்கள் இப்படத்தையும்  ஒளிப்பதிவு செய்து வருகிறார் இதுமட்டுமில்லாமல் நேர்கொண்டபார்வை படத்தில் பணியாற்றிய அத்தனை பேருமே இப்படத்திலும் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தில் அஜித் அவர்கள் இரட்டை வேடத்தில் நடித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது அதுமட்டுமில்லாமல் இப்படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்த ஹிமா குரோஷியா அவர்கள் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கிறார் எனவும் தகவல் உள்ளது அதுமட்டுமில்லாமல் இப்படத்தில் போலீஸ் அதிகாரியாகவும் நடித்து வருகிறார் என கூறிவருகின்றனர்.

இப்படம் முழுக்க முழுக்க அதிரடி ஆக்ஷன் கலந்த காட்சிகள் நிறைய இருக்குமென தெரியவருகின்றன இப்படம் தீபாவளி அன்று வெளியாகும் என தயாரிப்பாளர் போனி கபூர் அவர்கள் விருது விழா ஒன்றில் தெரிவித்துள்ளார். இப்படத்தில் இருந்து எந்த ஒரு அப்டேட்டும் இல்லாத நிலையில் தற்போது வரை ஏற்பட்டுள்ளது இந்த நிலையில் மே 1 அஜித் பிறந்த நாளன்று இப்படத்தில் இருந்து ஏதேனும் ஒரு அப்டேட் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் இப்படத்தின் இயக்குனர் ஹச். வினோத் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் திடீரென வலிமை படத்தைப்பற்றி பதிவிட்டுள்ளார். அஜித் நடித்த படங்களில் எனக்கு மிகவும் பிடித்த படம் மங்காத்தா தான் வலிமை படம் மங்காத்தா படத்தை போலவே தான் இருக்கும். அவ்வளவு ஏன் வலிமை இன்னொரு மங்காத்தா அதற்காக காத்திருங்கள் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Comment