வலிமை படத்தில் இருக்கிறது – “பீஸ்ட்” படத்திலும் இருக்கு.. அப்ப கல்லா கட்ட வேண்டியது தான் பாக்கி.

தமிழ் சினிமாவில் தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து அசத்தி வருபவர் நடிகர் அஜித்குமார் ஆனால் நேர்கொண்ட பார்வை படத்திற்குப் பிறகு இரண்டு வருடங்கள் கழித்து ஒரு வழியாக பல்வேறு தடைகளைத் தாண்டி வலிமை திரைப்படம் பிப்ரவரி 24ஆம் தேதி வெளியானது.

படம் ஆக்ஷன், சென்டிமென்ட் இருப்பதால் அஜித் ரசிகர்களையும் தாண்டி தற்போது பொது மக்களை குறிப்பாக பெண்களை கவர்ந்து என்பதால் கூட்டம் கூட்டமாக பொதுமக்கள் பார்த்து வருகின்றனர். இதனால் வலிமை திரைப்படம் தொடர்ந்து வசூல் மழை பெய்து வருகிறது. வலிமை திரைப்படம் ஆக்சன் சீன்கள் இருந்தாலும் முதலில் ரசிகர்கள் கொண்டாடி விட்டு.

தற்போது செண்டிமெண்ட் இருப்பதால் பெண்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகின்றனர் அதன் காரணமாகவே திரைப்படம் வெற்றியை நோக்கி பயணிக்கிறது. வலிமை படத்தில் அம்மா சென்டிமென்ட் சிறப்பாக இருப்பதால் மக்களையும் கவர்ந்து விடுத்துள்ளது இதுவே வெற்றிக்கான பார்முலா பார்க்கப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் தற்போது விஜய் படம் குறித்தும் ஒரு தகவல் கிடைத்துள்ளது.

தளபதி விஜய் நெல்சன் திலீப்குமார் உடன் முதல்முறையாக கைகோர்த்து பீஸ்ட் எனும் திரைப்படத்தை எடுத்து வருகிறார் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகப் பிரம்மாண்ட பொருட்செலவில் எடுத்துள்ளது. பீஸ்ட் திரைப்படம் வருகின்ற ஏப்ரல் மாதம் கோலாகலமாக வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.

இப்படி இருக்கின்ற நிலையில் வலிமை படம் எப்படி குடும்பம் மற்றும் ரசிகர்களை கவர்ந்து விடுகிறதோ அது போல  பீஸ்ட் திரைப்படத்தில் தங்கச்சி சென்டிமென்ட் காட்சிகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பீஸ்ட் படத்தில் நடிகை அபர்ணா தாஸ் விஜய்யின் தங்கையாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது நிச்சயம் இந்த படமும் நல்லதொரு வெற்றியை பெறும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Leave a Comment