படக்குழு எதிர்பார்த்த இடத்தில் வசூலில் பின்தங்கிய “வலிமை” – எந்த இடத்தில் தெரியுமா.?

அஜித்தின் வலிமை திரைப்படம் பல வருடங்கள் கழித்து திரையரங்கில் கோலாகலமாக வெளியாகி வெற்றிநடை கண்டு வருகிறது குறிப்பாக அஜித் ரசிகர்களையும் தாண்டி பொது மக்களையும் கவர்ந்து உள்ளது அந்த அளவிற்கு அஜித்தின் வலிமை திரைப்படம்.

செண்டிமெண்ட், ஆக்ஷன், த்ரில்லர் என அனைத்தும் கலந்துள்ளதால் படம் நல்ல வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. அஜித்தின் வலிமை திரைப்படம் எதிர்பார்க்காத ஒரு வசூலை கண்டுவருகிறது சொல்லப்போனால் தமிழகத்தில் மட்டுமே 100 கோடியைத் தாண்டி ஓடிக் கொண்டிருக்கிறது.

அதேசமயம் தமிழை தாண்டி மற்ற இடங்களான கர்நாடகா, ஹிந்தி, ஆந்திரா ஆகிய இடங்களிலும் வசூலில் அடித்து நொறுக்குவதால் படக்குழு சந்தோஷத்தில் இருக்கிறது சொல்லபோனால் திரையரங்க உரிமையாளர்கள், வினியோகஸ்தர்கள் பணமழையில் நனைக்கின்றனர். இப்படி இருந்தாலும் ஒரு சில முக்கிய இடங்களில் வசூலில் பின்தங்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சொல்லப்போனால் ஹிந்தியில் வலிமை படம் நல்ல வசூலை எட்டினாலும் புஷ்பா திரைப்படம் அளவிற்கு படக்குழு எதிர்பார்த்தது ஆனால் அது நடக்காமல் போனது அதேபோல வெளிநாடுகளிலும் அஜித்தின் வலிமை திரைப்படத்தின் வசூல் பின்தங்கி உள்ளதாக கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக அமெரிக்கா மற்றும் UK ஆகிய பகுதிகளில் வலிமை திரைப்படம் அதிக திரையரங்குகளில் வெளியாகி இருந்தாலும் பெரிய அளவில் வசூல் வேட்டை நடத்த பெற்றுத் தரவில்லை என கூறப்படுகிறது.

வலிமை வெளிநாடுகளில் படமும் சிறப்பாக ஓடவில்லை என்றாலும் தமிழ்நாட்டில் வலிமை படத்திற்கான வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது சொல்லப்போனால் ரசிகர்களையும் தாண்டி குடும்பத்தினர் மற்றும் பலர் படத்தைப் பார்த்து கண்டுகளித்து வருகின்றனர். இதனால் நாளுக்கு நாள் வசூலை அள்ளிக் கொண்டே இருக்கிறது.

 

Leave a Comment